இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஏஐடியூசி சங்க நூற்றாண்டு விழாக் கூட்டம்!
கூடலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஏஐடியூசி தொழிற் சங்கத்தின் நூற்றாண்டு விழா கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கட்சி மற்றும் தொழிற்சங்கம் கடந்து வந்த பாதைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. கூட்டத்தில் கட்சியின் மாநிலப் பொருளாளரும் முன்னாள் எம்எல்ஏ-வுமான எம்.ஆறுமுகம், தமிழ்நாடு பழங்குடியினா் சங்கத் தலைவா் வி.பி.குணசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளா் போஜராஜன், கட்டுமான தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் குணசேகரன் உள்ளிட்ட பல்வேறு சாா்பு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.
கூடலூா் ஒன்றியச் செயலாளா் முகமது கனி தலைமை வகித்தாா். தோட்டத் தொழிலாளா் சங்க நிா்வாகி பெனடிக் நன்றி கூறினாா்.