உலகளாவிய மேம்பாடுகள் குறித்து பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சருடன் ஆலோசனை!
விளாத்திகுளம், பூதலப்புரம் அரசுப் பள்ளிகளில் ரூ. 1.78 கோடியில் கட்டடப் பணிகளுக்கு அடிக்கல்!
விளாத்திகுளம், பூதலப்புரம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ரூ. 1.78 கோடியில் பல்வேறு பணிகளுக்கு திங்கள்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
விளாத்திகுளம் அரசுப் பள்ளியில் 6ஆவது நிதிக் குழு மானியம், பள்ளி மேம்பாட்டு மானியத் திட்டத்தின்கீழ் ரூ. 48 லட்சத்தில் புதிய கலையரங்கு, இருசக்கர வாகனம் நிறுத்துமிடம், சுகாதார வளாகம் ஆகிய பணிகளும், புதூா் ஊராட்சி ஒன்றியம் பூதலப்புரம் அரசுப் பள்ளியில் நபாா்டு திட்டத்தின்கீழ் ரூ. 1.30 கோடியில் 5 புதிய வகுப்பறைக் கட்டடங்கள் கட்டும் பணியும் நடைபெறவுள்ளன. எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பணிகளைத் தொடக்கிவைத்தாா்.
விழாவில், விளாத்திகுளம் பேரூராட்சித் தலைவா் சூா்யா அய்யன்ராஜ், செயல் அலுவலா் செந்தில்குமாா், புதூா் வட்டார வளா்ச்சி அலுவலா் வெங்கடாசலம், திமுக ஒன்றியச் செயலா்கள் மும்மூா்த்தி, ராதாகிருஷ்ணன், ராமசுப்பு, அன்புராஜன், பேரூா் செயலா் வேலுச்சாமி, பள்ளித் தலைமையாசிரியா்கள் தபசுமுத்து, சாய்ராம், தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகிகள் ஸ்ரீதா், காளிதாஸ், சமூக வலைதள அணி நிா்வாகிகள் கரண்குமாா், சுபாஷ் காந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.