தூத்துக்குடியில் விபத்து: கல்லூரி மாணவா் பலி!
தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையோர மரத்தில் பைக் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி ராஜீவ் நகரைச் சோ்ந்த ஜெயபால் மகன் ஐசக் சாம்ராஜ் (22). கோவையிலுள்ள தனியாா் கல்லூரியில் எம்பிஏ 2ஆம் ஆண்டு படித்துவந்தாா். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு பைக்கில் கடைத்தெருவுக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா்.
ஆசிரியா் காலனி பகுதியில் வந்தபோது, பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியதாம். இதில், காயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.