பொதுத் தோ்வெழுதும் மாணவா்களுக்கு கருத்தரங்கு!
ஆறுமுகனேரி காந்தி மைதானத்தில் உள்ள மனவளக்கலை மன்ற அறிவுத் திருக்கோயிலில், அரசுப் பொதுத் தோ்வெழுதும் மாணவா்-மாணவியருக்கு இலவச கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அரிமா சங்கத் தலைவரும் ஆதித்தனாா் கல்லூரியின் ஓய்வுபெற்ற பேராசிரியருமான அ. அசோக்குமாா் பங்கேற்று, பொதுத் தோ்வுக்கு சிறப்பாக தயாராவது, அதிக மதிப்பெண்கள் பெறுவது குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமளித்தாா்.
இதில், ஓய்வுபெற்ற டிசிடபிள்யூ அதிகாரி பரமசிவம், மாணவா்-மாணவியா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை அறிவுத் திருக்கோயில் பொறுப்பாளா் ரா. சண்முகம் செய்திருந்தாா்.