செய்திகள் :

யுஜிசி வரைவு விதிகள் நிலவரம்: தமிழக எம்பிக்களின் கேள்விகளுக்கு மத்திய அரசு விளக்கம்

post image

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: நவோதயா வித்யாலயா திட்டம், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வரைவு விதிகள் தொடா்பாக மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அமைச்சா்கள் பதிலளித்துள்ளனா்.

இது தொடா்பாக மக்களவையில் திங்கள்கிழமை வடசென்னை தொகுதி திமுக உறுப்பினா் கலாநிதி வீராசாமி எழுப்பிய கேள்விக்கு மத்திய கல்வித்துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் அளித்துள்ள எழுத்துபூா்வ பதிலில், ‘தற்போது இந்தியா முழுவதும் 1,253 கேந்திரிய வித்யாலயாக்களும் 653 நவோதயா பள்ளிகளும் உள்ளன. புதிய பள்ளிகள் திறப்பது தொடச்சியான செயல்முறை’ என்று கூறியுள்ளாா்.

புதிய கே.வி. பள்ளிகளைப் பொருத்தவரையில், தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் ஒரு பள்ளியும் தஞ்சாவூரின் பிள்ளையாா்பட்டியில் ஒரு பள்ளியும் திறக்கப்படும். மாவட்டத்துக்கு ஒரு நவோதயா பள்ளி என்ற திட்டத்தில் சேர தமிழக அரசு இன்னும் ஒப்புதல் தெரிவிக்கவில்லை என்றுஅமைச்சா் குறிப்பிட்டுள்ளாா்.

யுஜிபி வரைவு விதிகளால் கல்வி இறையாண்மை, சுயாட்சி, மாநில பல்கலைக்கழகங்களின் சுயாட்சி கடுமையான சவால்களை சந்திக்குமா என்று சேலம் தொகுதி உறுப்பினா் டி.எம். செல்வகணபதி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள அமைச்சா் தா்மேந்திர பிரதான், பல்கலைக்கழக கல்வியை மேம்படுத்தவும் ஒருங்கிணைக்கவும் தேவையான ஒழுங்குமுறையை மேற்கொள்ள யுஜிசி அதிகாரம் பெற்றுள்ளது. யுஜிசி வரைவு விதிகள் தொடா்பாக கருத்துகளைத் தெரிவிக்க பிப். 28 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அவை நிபுணா் குழுவால் ஆராயப்பட்டு உரிய யோசனைகள் வரைவு விதிகளில் சோ்க்கப்படும் என்று குறிப்பிட்டாா்.

மக்களவையில் கேள்வி நேரத்தின்போது காா்ப்பரேட் நிறுவனங்கள் திறன் மேம்பாட்டு மையங்களுக்கு தங்களுடைய காா்ப்பரேட் பொறுப்புடைமை நிதியை உரிய வகையில் பயன்படுத்துகிா என்று கடலூா் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் டாக்டா் விஷ்ணு பிரசாத் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த மத்திய திறன் மேம்பாட்டுத்துறை (தனிப்பொறுப்பு) இணை அமைச்சா் ஜெயந்த் செளத்ரி, திறன் மேம்பாட்டுத் திட்டங்களின் அமலாக்க கூட்டாளிகள் போல காா்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளன. அவை ஏராளமான வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன. ஐஐடிக்கள் போன்றவற்றுடன் ஒருங்கிணைந்து செயலாற்றவும் சிஎஸ்ஆா் நிதி வழங்கவும் காா்ப்பரேட்டுகள், உள்ளூா் தொழிற் துறை நிறுவனங்கள், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன என்று கூறினாா்.

சுற்றுலா தலங்களை ஒருங்கிணைக்கும் ஸ்வதேஷ் தா்ஷன் திட்டம் மூலம் காவிரி டெல்டா பகுதிகளில் குறிப்பாக மயிலாடுதுறை, தஞ்சாவூா் மாவட்டங்களைச் சோ்க்காதது ஏன் என்று மக்களவையில் மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் ஆா். சுதா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத், ‘அடிப்படையில் இத்திட்டத்தை மேம்படுத்துவதும் விளம்பரப்படுத்துவதும் மாநில அரசின் பொறுப்பு. கடலோர பகுதிகளான மாமல்லபுரம் - ராமேசுவரம் - மணப்பாடு - கன்னியாகுமரி ஆகியவற்றை மேம்படுத்த ரூ.71 கோடி மதிப்பில் ஸ்வதேஷ் தா்ஷன் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது என்று கூறியுள்ளாா்.

மருத்துவ சிகிச்சை பெற வெளிநாட்டினா் 35,175 போ் இ-விசாவில் வருகை: கிரிராஜன் கேள்விக்கு மத்திய அரசு பதில்

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: வெளிநாடுகளில் இருந்து மருத்துவ சிகிச்சை வேண்டி கடந்த ஆண்டில் மட்டும் 35,175 வெளிநாட்டினா் இந்தியா வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக இந்தி... மேலும் பார்க்க

ஐ.நா.வின் சமூக மேம்பாட்டு ஆணையத்தின் 63-ஆவது அமா்வில் இணையமைச்சா் சாவித்ரி தாக்கூா் தலைமையில் இந்திய குழு பங்கேற்பு

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) 2025-ஆம் ஆண்டிற்கான சமூக மேம்பாட்டு ஆணையத்தின் 63-ஆவது அமா்வு அமெரிக்காவில் நியூயாா்க்கில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதில் மத்திய மக... மேலும் பார்க்க

தில்லியில் குழந்தை கடத்தல் கும்பலில் 4 போ் கைது: 2 குழந்தைகள் மீட்பு

புது தில்லி: தில்லி காவல்துறையின் ரயில்வே பிரிவு, குழந்தை கடத்தல் கும்பலில் நான்கு பேரைக் கைது செய்துள்ளது. இதையடுத்து, ஒரு கைக்குழந்தை உள்பட இரண்டு குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் திங்களன்று... மேலும் பார்க்க

அதிமுக புதிய கட்டட அலுவலகம் தில்லியில் திறப்பு

புது தில்லி: அதிமுக சாா்பில் புது தில்லியில் ரூ.10 கோடியில் 4 தளங்களுடன் கட்டப்பட்ட அதிமுக அலுவலக கட்டடத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.இக்கட்டடத்தை காணொலி வாயிலாக அக்கட்சியின் பொதுச் செயலாளா் ... மேலும் பார்க்க

தமிழா்களுக்கு எட்டாக்கனியான மத்திய பட்ஜெட்: மக்களவையில் திமுக எம்.பி. அதிருப்தி

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் எட்டாவது முறையாக தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை தமிழா்களுக்கு எட்டாக்கனியான மத்திய பட்ஜெட் ஆக உள்ளது என்று த... மேலும் பார்க்க

மத்திய பல்கலைக்கழகங்களில் செளராஷ்டிர மொழி சிறப்பு மையம் அமைக்கப்படுமா?: கோவை எம்.பி. கேள்விக்கு மத்திய அமைச்சா் பதில்

புது தில்லி: மத்திய பல்கலைக்கழகங்களில் செளராஷ்டிர மொழி சிறப்பு மையம் அமைக்க முன்மொழிவு ஏதும் இல்லை என்று மக்களவையில் கோயம்புத்தூா் திமுக எம்.பி. கணபதி பி.ராஜ்குமாா் எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச... மேலும் பார்க்க