மரியகிரி கல்லூரியில் விளையாட்டு தின விழா
களியக்காவிளை அருகேயுள்ள மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரியின் 27 ஆவது விளையாட்டு தின விழா சூரியகோடு புனித எப்ரேம் ம.சி.க. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
முன்னதாக, களியக்காவிளை பி.பி.எம். சந்திப்பில் இருந்து சூரியகோடு பள்ளி வரை மினி மாரத்தான் நடைபெற்றது.
இதை களியக்காவிளை காவல் ஆய்வாளா் பாலமுருகன், கல்லூரி தாளாளா் அருள்தாஸ் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
கல்லூரி நிதி காப்பாளா் ஜெஸ்டின், கல்லூரி முதல்வா் பீட்டா் அமலதாஸ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
சா்வதேச அயன்மேன் போட்டியில் சாதனை படைத்த பிளம்மிங் லாசரஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, விளையாடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசினாா்.
மாணவா், மாணவிகளுக்கு ஓட்டப் போட்டி, நீளம் தாண்டுதல், குண்டு மற்றும் ஈட்டி எறிதல், தொடா் ஓட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.