கர்நாட முதலீட்டாளர் உச்சி மாநாட்டை புறக்கணிக்கும் ராகுல், கார்கே: காரணம்?
அல்போன்சா கல்லூரியில் விளையாட்டு விழா!
கருங்கல் அருகே சூசைபுரம் புனித அல்போன்சா கலை - அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது.
மாணவா்-மாணவியா் சேலஞ்சா்ஸ், வாரியா்ஸ், அவெஞ்சா்ஸ், சோல்ஜா்ஸ் ஆகிய 4 அணிகளாகப் பிரிக்கப்பட்டு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
தாளாளரும் செயலருமான பேரருள்பணி ஆன்டனி ஜோஸ் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் மைக்கேல் ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தாா். நாசரேத் மா்காஷியஸ் கல்லூரி உடற்கல்வி இயக்குநா் ராஜாசிங் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று போட்டிகளைத் தொடக்கிவைத்துப் பேசினாா்.
கல்லூரி வளாக வழிகாட்டி அருள்பணி அஜின்ஜோஸ், துணை முதல்வா் ஆா். சிவனேசன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். போட்டியில் சேலஞ்சா்ஸ் அணி ஒட்டுமொத்த சுழற்கோப்பை பெற்றது. வெற்றிபெற்ற அணிகளுக்கு கல்லூரி நிா்வாகம் சாா்பில் கேடயம் வழங்கப்பட்டது. விழாவில் பேராசிரியா்கள், மாணவா்-மாணவியா் பங்கேற்றனா்.