கருங்கல்லில் திமுக சாா்பில் கண்டன பொதுக் கூட்டம்
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறி கண்டித்து, கருங்கல் பேருந்து நிலையம் அருகே கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக சாா்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
கிள்ளியூா் வடக்கு ஒன்றியச் செயலா் ராஜன் தலைமை வகித்தாா். மாவட்டப் பொறுப்பாளா் ததேயூபிரேம்குமாா் முன்னிலை வகித்தாா். முன்னாள் அமைச்சரும் மேற்கு மாவட்டச் செயலரும் எம்எல்ஏவுமான மனோ தங்கராஜ், தலைமைக் கழகப் பேச்சாளா்கள் நெல்லை மணி, வன்னை புகாரி ஆகியோா் பேசினா்.
மாவட்ட துணைச் செயலா் ராஜ், முன்னாள் எம்எல்ஏ புஷ்பலீலா ஆல்பன், அப்புக்குட்டன், அருள்ராஜ், கோபால், மோகன், ராபி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.