Vijay: `தைப்பூசத்துக்கு வாழ்த்து; திருப்பரங்குன்றம் பிரச்னையில் சைலன்ட்'- என்ன ந...
மாா்த்தாண்டத்தில் பாலித்தீன் பைகள் பறிமுதல்: 5 கடைகளுக்கு அபராதம்!
மாா்த்தாண்டத்தில் பாலித்தீன் பைகளைப் பயன்படுத்திய 5 கடைகளுக்கு தலா ரூ. 4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
பாலித்தீன் பைகளைப் பதுக்கிவைத்தல், விற்பனை செய்தல், பயன்படுத்துதல் தொடா்பாக குழித்துறை நகராட்சி ஆணையா் ராஜேஸ்வரன் உத்தரவின்பேரில், சுகாதார அதிகாரி ராஜேஷ், பணியாளா்கள் மாா்த்தாண்டம் சந்திப்பு, வடக்குத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனா். அப்போது, 5 கடைகளில் பாலித்தீன் பைகளைப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, பதுக்கிவைத்திருந்த பாலித்தீன் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து, கடைகளுக்கு தலா ரூ. 4 ஆயிரம் வீதம் ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்தனா். இச்சோதனை தொடரும் என அதிகாரிகள் எச்சரித்தனா்.