முசோலினி vs Hitler-ன் சண்டைக்கு காரணம் இதுதானா? | Mussolini Web series #18
'முசோலினி' ஒரு பக்கம் ஹீரோவாகவும், இன்னொரு பக்கம் வில்லனாகவும் பார்க்கப்படுகின்ற ஒருவர். உண்மையிலேயே முசோலினி என்பவர் யார்? அவர் சிங்கமா... ஆடா?! அவருடைய ஒட்டுமொத்தமான வாழ்க்கை வரலாறையும், நம்முடைய 'ஜூனியர் விகடன்' இதழில், உதவி பொறுப்பாசிரியர் திரு. பாலுசத்யா தொடராக எழுத தொடங்கி இருக்கிறார். அதற்கான ஓவியங்களை திரு எம். ஜெயசூர்யா வரைந்து கொடுத்திருக்கிறார். 'முசோலினி ஒரு பேரழிவுகாரனின் கதை' என்கிற தொடர், புதிய Video Series ஆக வருகிறது. ஹிட்லரும், முசோலினியும் நெருங்கிய நண்பர்கள் என கேள்விப்பட்டுள்ளோம் ஆனால் அவர்களே மோதிக் கொண்டார்கள் என்றால் ஆச்சர்யமாக உள்ளதல்லவா?! அந்த மோதலுக்கு ஒருவகையில் காரணம் 'ஆஸ்திரியா' நாடு. ஒரு படுகொலை, இருவரையும் எதிரெதிரே நிறுத்தியது. இதற்காக, பின்னாட்களில் வருத்தம் தெரிவித்தார் ஹிட்லர்.