ஒரே நாளில் வெளியாகும் வீர தீர சூரன், ஜீனி?
நடிகர்கள் விக்ரம், ரவி மோகனின் படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் விக்ரம் தங்கலான் வெற்றிக்குப் பின் இயக்குநர் சு. அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். ஆக்ஷன் திரில்லர் படமாக உருவான இது மார்ச் மாதம் வெளியாகும் என கூறப்பட்டது.
இதையும் படிக்க: ரேகா சித்திரம் - வெற்றியைப் பதிவுசெய்த ஆசிஃப் அலி!
அதேபோல், நடிகர் ஜெயம் ரவி நடித்த ஜீனி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து எடிட்டிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், இந்த இரண்டு திரைப்படங்களும் வருகிற மார்ச். 28 ஆம் தேதி திரைக்கு வருவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.