தஞ்சை பெருநந்திக்கு 2 ஆயிரம் கிலோ காய்கறி, பழங்களால் அலங்காரம்!
ஒலிம்பிக் பதக்கங்களை திருப்பியளிக்கிறார் மனு பாக்கர்! என்ன காரணம்?
துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் தான் பெற்றுள்ள ஒலிம்பிக் பதக்கங்களை திருப்பியளிக்க முடிவெடுத்துள்ளார்.
2024-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கம் வென்றவர்களிடமிருந்து பதக்கங்களை திருப்பி பெறுவதாக அறிவித்துள்ளது சர்வதேச ஒலிம்பிக் குழு.
சர்வதேச ஒலிம்பிக் குழு வெளியிட்டுள்ள தகவலின்படி, 2024-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் வழங்கப்பட்டுள்ள பதக்கங்கள் ஏதேனும் சேதமடைந்திருப்பின், வீரர்கள் அந்த பதக்கங்களை திருப்பியளித்துவிட்டு மாற்று பதக்கங்களை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்தாண்டு ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் மனு பாக்கர் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், மேற்கண்ட பதக்கங்கள் சேதமடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, மனு பாக்கர் தான் பெற்ற பதக்கங்களை திருப்பியளிக்க உள்ளார். அவரிடமிருந்து பெறப்படும் பதக்கங்களுக்குப் பதிலாக, புதிய பதக்கங்கள் விரைவில் வழங்கபட உள்ளன.
ஒலிம்பிக் நாயகி மனு பாக்கருக்கு கேல் ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.