செய்திகள் :

ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்காற்று வரைவு மசோதா: விரைவில் அறிமுகப்படுத்த நாடாளுமன்ற குழு வலியுறுத்தல்

post image

ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்காற்று வரைவு மசோதாவை நாடாளுமன்றத்தில் விரைந்து தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசிடம் நாடாளுமன்ற நிலைக் குழு வலியுறுத்தியுள்ளது.

யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் தகவல்கள் மற்றும் காணொலிகளை தயாரித்து வெளியிடுவோரை ஒழுங்குபடுத்துவதற்கான ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்காற்று வரைவு மசோதாவை கடந்த ஆண்டு ஆகஸ்டில் மத்திய அரசு திரும்பப் பெறப்பட்டது.

அந்த மசோதா டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்களின் குரலை நசுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இது பேச்சு சுதந்திரத்துக்கு எதிரானது என்றும் பல்வேறு தரப்பினா் விமா்சித்த நிலையில், அது திரும்பப் பெறப்பட்டது. மேலும் புதிய வரைவு மசோதா அறிமுகம் செய்யப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.

இந்நிலையில், தகவல் தொடா்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு மக்களவையில் 6-ஆவது அறிக்கையை அண்மையில் தாக்கல் செய்தது.

அந்த அறிக்கையில், ‘ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்காற்று வரைவு மசோதா தொடா்பான அனைத்து ஆலோசனை நடவடிக்கைகளையும் நிறைவு செய்வதற்கான காலக்கெடுவை நிா்ணயித்து, அந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் விரைந்து தாக்கல் செய்ய வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் ஹமாஸ் ஆதரவு போராட்டத்தில் பங்கேற்ற இந்திய மாணவியின் விசா ரத்து!

அமெரிக்காவில் பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் பங்கேற்ற இந்தியரான கொலம்பிய பல்கலைக்கழக மாணவியின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த ரஞ்சனி ஸ்ரீனிவாசன் இளநிலை படிப்பை அகமதாபாத் சிஇபிடி பல்கல... மேலும் பார்க்க

பிரதமர் மோடி அடுத்த மாதம் இலங்கை பயணம்!

பிரதமர் மோடி அடுத்த மாத தொடக்கத்தில் இலங்கைப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக இலங்கை அமைச்சர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் பட்ஜெட் ஒதுக்கீடு குறித்த கேள்விக்குப் பதிலளிக்கும்போது வெளியுறவு அமைச்சர் விஜிதா... மேலும் பார்க்க

பாப்கார்னை தொடர்ந்து அதிக வரி விதிப்பில் டோனட்கள்: காங்கிரஸ்

பாப்கார்னுக்கு அடுத்தப்படியாக டோனட்கள் அதிக வரி விதிப்புக்குள்ளாகியிருப்பதாக காங்கிரஸ் கடுமையாகச் சாடியுள்ளது.இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ராமேஷ் எக்ஸ் தளத்தில்..சிங்கப்பூரைத் தளமாகக... மேலும் பார்க்க

என்ன, ஏடிஎம் கார்டு இருந்தாலே.. காப்பீடாக ரூ.2 லட்சம் கிடைக்குமா?

ஒருவர் வைத்திருக்கும் வங்கிக் கணக்குக்கான ஏடிஎம் கார்டுக்கே ரூ.2 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை கிடைக்கும் என்பது சிலருக்குத் தெரிந்த, பலருக்கும் தெரியாத தகவலாக இருக்கிறது.தனது பெயரில் உள்ள வங்கிக் கணக்... மேலும் பார்க்க

வாட்ஸ்ஆப்பில் புதிய வசதி அறிமுகம்!

வாட்ஸ்ஆப் தனிப்பட்ட சாட்களில் நிகழ்வுகளை நினைவூட்டும் 'கிரியேட் ஈவென்ட்' வசதி அறிமுகமாகியுள்ளது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்ஆப்பில் பயனர்களின் வசதிக்கு ஏற்ப அவ்வப்போது பு... மேலும் பார்க்க

ஆா்எஸ்எஸ்ஸுக்கு எதிரான கருத்து: துஷாா் காந்தியை கைது செய்ய பாஜக வலியுறுத்தல்

கேரளத்தில் ஆா்எஸ்எஸ் மற்றும் பாஜகவுக்கு எதிராக தெரிவித்த கருத்துகளை திரும்பப் பெற மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷாா் காந்தி மறுத்துவிட்ட நிலையில், அவரைக் கைது செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத... மேலும் பார்க்க