நியூசி.க்கு எதிரான தொடரில் சிறந்த முடிவுகளை பெறுவோம்: பாக். கேப்டன்
என்ன, ஏடிஎம் கார்டு இருந்தாலே.. காப்பீடாக ரூ.2 லட்சம் கிடைக்குமா?
ஒருவர் வைத்திருக்கும் வங்கிக் கணக்குக்கான ஏடிஎம் கார்டுக்கே ரூ.2 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை கிடைக்கும் என்பது சிலருக்குத் தெரிந்த, பலருக்கும் தெரியாத தகவலாக இருக்கிறது.
தனது பெயரில் உள்ள வங்கிக் கணக்குக்கான ஏடிஎம் அட்டை பயன்படுத்திக் கொண்டிருந்த நபர், எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி மரணமடைய நேர்ந்தால், அவரது ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி ரூ.2 லட்சம் வரை விபத்துக் காப்பீடு பெற முடியும் என்கிறது ஆர்பிஐ விதிமுறை.
ஆனால், இந்த காப்பீட்டுத் தொகையான வங்கிக்கு வங்கியும், ஏடிஎம் அட்டையின் வகையின் அடிப்படையிலும் மாறுபடுகிறது.