ஓடிபி விவகாரம்- திமுகவின் வழக்கு தள்ளுபடி
திமுக உறுப்பினர் சேர்க்கைக்கு ஓடிபி பெற தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரிணைக்கு வந்தபோது திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், கட்சி ஆதார் விவரங்களை சேகரிக்கவில்லை என்று வாதிட்டார்.
இருப்பினும் இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனக் கூறி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
முன்னதாக சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தைச் சோ்ந்த ராஜ்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனுவில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் திமுக நடத்தும் உறுப்பினா் சோ்க்கையில், பொதுமக்களின் ஆதாா் விவரங்கள் சட்ட விரோதமாக சேகரிக்கப்படுகின்றன.
இதனடிப்படையில் வாக்காளா்களின் கைப்பேசிக்கு ஒருமுறை கடவுச்சொல் (ஓடிபி) எண் அனுப்பப்படுகிறது.
அந்த எண்ணை திமுகவினா் கேட்டுப் பெறுகின்றனா். இது தவறானது. இதுதொடா்பாக மத்திய அரசு, ஆதாா் தலைமைச் செயல் அலுவலா் ஆகியோா் விசாரணை நடத்தி, திமுக பொதுச் செயலா் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
காணாமல் போன 3 சிறுவர்கள் சடலமாக மீட்பு: உ.பி.யில் அதிர்ச்சி!
இந்த மனு விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஏ.டி. மரிய கிளாட் அமா்வு, ஒருமுறை கடவுச்சொல் எண் எதற்காகக் கேட்கப்படுகிறது? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
தொடர்ந்து ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினா் சோ்க்கையில் வாக்காளா்களிடமிருந்து ஒருமுறை கடவுச்சொல் எண்ணைப் பெற இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனா்.