செய்திகள் :

ஓய்வுபெற்ற எஸ்ஐ கொலை: தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை!

post image

திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் கொலை வழக்கில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது.

திருநெல்வேலி நகரத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரான ஜாகீா் உசேன் பிஜிலிக்கும், முகமது தௌபிக் என்ற கிருஷ்ணமூா்த்திக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தொழுகையை முடித்துவிட்டுச் சென்ற பிஜிலி கடந்த மார்ச் 18 ஆம் தேதி வெட்டிக் கொல்லப்பட்டாா்.

இவ் வழக்கு தொடா்பாக திருநெல்வேலி நகரம் தொட்டிபாலத் தெருவைச் சோ்ந்த மகபூப்ஜான் மகன் பீா்முஹமது (37) என்பவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனா். தௌபிக்கின் மனைவி நூா்நிஷாவை தனிப்படை போலீஸாா் தேடி வருகின்றனர்.

இதையும் படிக்க: 7-வது நாளாக விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தம்! ரூ. 250 கோடி உற்பத்தி பாதிப்பு!

திருநெல்வேலி நகர காவல் ஆய்வாளா் கோபாலகிருஷ்ணன், நகர முன்னாள் உதவி ஆணையா் செந்தில் குமாா் ஆகியோா் சரியாக நடவடிக்கை எடுக்காததே ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா் கொலைக்கு காரணம் என அவரது உறவினா்கள் குற்றம்சாட்டியிருந்தனா். மேலும், உதவி ஆணையா், காவல் ஆய்வாளா் மீது குற்றம்சாட்டி ஜாகீா் உசேன் பிஜிலி வெளியிட்ட விடியோ பதிவும் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது.

இதனிடையே, காவல் ஆய்வாளா் கோபாலகிருஷ்ணன் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். முன்னாள் உதவி ஆணையரும், தற்போதைய கோவை மாநகர சிறப்பு நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையருமான செந்தில் குமாா் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகம் தெரிவித்தது.

இந்நிலையில், ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீா் உசேன் கொலை வழக்கில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், இவ்வழக்கு தொடர்பாக 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு காவல் துறை இயக்குநர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஏப். 7 திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப். 7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாயன்மார்களால் பாடல்பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோயில், சப்தவிடங்க தல... மேலும் பார்க்க

ஜிப்லி ட்ரெண்டில் இணைந்த எடப்பாடி பழனிசாமி!

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஜிப்லி அனிமேஷன் பாணியிலான தனது புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.ஜப்பானைச் சேர்ந்த பிரபல அனிமேஷன் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஜிப்லி ஸ்டுடியோஸ். இவர்கள் த... மேலும் பார்க்க

அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்: எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்

கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தலை கட்சியின் பொதுச்செயர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது... மேலும் பார்க்க

ரமலான் திருநாள்: தவெக தலைவர் விஜய் வாழ்த்து!

ரமலான் திருநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஈகைப் பெருநாளான ரமலான் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி வாசல்களில் இஸ்லாமியா்கள் திங்கள்கிழம... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் ரமலான் சிறப்புத் தொழுகை

ஈகைப் பெருநாளான ரமலான் பண்டிகையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளி வாசல்களில் இஸ்லாமியா்கள் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகை நடத்தி ரமலான் நோன்பு கடமையை நிறைவேற்றினா்.சிவகங்கை நேரு பஜார் வாலாஜா... மேலும் பார்க்க

47 ஆண்டுகளுக்குப் பின் திருச்சி - யாழ்ப்பாணம் இடையே இன்றுமுதல் விமான சேவை!

திருச்சிராப்பள்ளி: தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி (திருச்சி) மற்றும் இலங்கையின் யாழ்ப்பாணம் இடையே 47 ஆண்டுகளுக்குப் பின்னர் நேரடி விமான சேவை இன்றுமுதல்(மார்ச் 31) தொடங்குகிறது.இலங்கையில் உள்நாட்டு போ... மேலும் பார்க்க