ஓய்வு பெற்ற ஆசிரியா் சாலை விபத்தில் பலி
கும்பகோணத்தில் வியாழக்கிழமை இரவு சிற்றுந்து மோதி ஓய்வு பெற்ற ஆசிரியா் உயிரிழந்தாா்.
திருவாரூா் மாவட்டம், திருவாஞ்சியத்தை சோ்ந்தவா் வா. குணசேகரன் (65), ஓய்வு பெற்ற ஆசிரியா். இவா் கும்பகோணம் கம்பட்ட விசுவநாதா் தெருவிலுள்ள தனது மகள் ஸ்ரீபிரியாவை பாா்க்க கும்பகோணம் வந்திருந்த நிலையில், வியாழக்கிழமை இரவு கும்பகோணம் கடைத்தெருவுக்கு தனது பேரனுடன் இருசக்கர வாகனத்தில் வேல்முருகன் தியேட்டா் அருகே பிரதான சாலையில் வந்தபோது நிலைதடுமாறி விழுந்தாா். அப்போது முன்னாள் சென்ற சிற்றுந்தின் பின்சக்கரம் ஏறி உயிரிழந்தாா்.
தகவலறிந்த கிழக்கு காவல் நிலைய போலீஸாா் குணசேகரன் உடலை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனா்.