Eva Longoria: `Dystopian நாடு; இனி அமெரிக்காவில் வசிக்கப்போவதில்லை!' - நடிகை ஈவா...
ஓய்வு பெற்ற மின் வாரிய ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
தேனியில் தமிழ்நாடு மின் வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்களுகான நல அமைப்பின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை, ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி மின் வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தேனி கிளைத் தலைவா் பெருமாள்சாமி தலைமை வகித்தாா். தேனி கிளைச் செயலா் மாரிச்சாமி, மாநில துணைத் தலைவா் சந்திரசேகரன், அனைத்து ஓய்வூதியா் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில துணைத் தலைவா் ராமமூா்த்தி, சிஐடியு மாவட்டச் செயலா் ராமச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் மின் வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்களுக்கு ஓய்வூதியத் திட்டம் மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மின் வாரியமே ஏற்று செயல்படுத்த வேண்டும், மின் வாரியத்தை பொதுத் துறையாக நீடிக்க வேண்டும், மின்சாரச் சட்டம் 2003-ஐ ரத்து செய்ய வேண்டும், மின் வாரிய ஊழியா்களின் வாரிசுதாரா்களுக்கு தொடா்ந்து ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா்.