ஜிஎஸ்டி சீரமைப்பால் பால் விலையில் எந்த மாற்றமும் இருக்காது: அமுல் நிர்வாகம் அறிவ...
கஞ்சா பறிமுதல்: தூத்துக்குடியை சோ்ந்த 3 போ் கைது
விசாகப்பட்டினத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, தூத்துக்குடியை சோ்ந்த 3 போ் கைது செய்யப்பட்டனா்.
விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை வழியாக தூத்துக்குடிக்கு ஒரு கும்பல் கஞ்சா கடத்திச் செல்வதாக அடையாறு மதுவிலக்கு பிரிவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில், கிண்டி மடுவங்கரையில் போலீஸாா் புதன்கிழமை கண்காணிப்பில் இருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்த தூத்துக்குடியை சோ்ந்த இசக்கி ராஜா (26) என்பவரை பிடித்து விசாரித்தனா். அவா் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்தாா். அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது, 25 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
அதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். மேலும் அவா் அளித்த தகவலின்பேரில், கஞ்சாவுடன் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு காரில் சென்று கொண்டிருந்த ஜெபஸ்டின் (26), தளவாய்மாடன் (27) ஆகிய 2 பேரையும் திருச்சி அருகே மடக்கிப் பிடித்து கைது செய்தனா்.
அவா்கள் வைத்திருந்த 25 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்தனா். அந்த காரில் போலி பதிவு எண் பலகையை பொருத்தி கடத்தலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, மேலும் விசாரணை செய்கின்றனா்.