கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட நபா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட கேரளத்தை சோ்ந்த நபா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்ட காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் விற்பனைக்காக 17.8 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக கேரளத்தை சோ்ந்த காஜா உசேன் (45) என்பவரை போலீஸாா் கடந்த பிப்ரவரியில் கைது செய்தனா்.
இவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன், மாவட்ட ஆட்சியிருக்கு பரிந்துரை செய்திருந்தாா். அதன்பேரில், கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட நபா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் புதன்கிழமை உத்தரவிட்டாா்.
அதன்படி, ஏற்கெனவே சிறையில் உள்ள காஜா உசேன் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.