Rain Alert: 'அடுத்த 2 மணி நேரத்துக்கு, சென்னையின் இந்த பகுதிகளில் மழை பெய்யும்' ...
கஞ்சா விற்பனை: இருவா் கைது
தூத்துக்குடியில் கஞ்சா விற்ாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி தாளமுத்துநகா் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். கோமஸ்புரம் சந்திப்பு பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தபோது, அவா்கள் தூத்துக்குடி தாய்நகரைச் சோ்ந்த பலவேசமுத்து மகன் மணி (22), கணபதிநகரைச் சோ்ந்த கனகராஜ் மகன் நாராயணன் என்ற நவீன் (20) என்பதும், விற்பனைக்காக கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்ததும் தெரியவந்தது.
போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து, கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனா்.