Baby John x Theri: `அது இதுல...' - தெறி விஜய், பேபி ஜான் வருண்; ரீமேக் ரீஸர் | P...
கஞ்சா விற்பனை: இளைஞா் கைது
சிவகாசியில் திங்கள்கிழமை விற்பனைக்காக கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
சிவகாசியில் ஸ்ரீவில்லிபுத்தூா் சாலையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். ரிசா்வ்லயன் பேருந்து நிறுத்தம் பகுதியில் கையில் பையுடன் நின்று கொண்டிருந்த சிவகாசி அருகேயுள்ள தேவா்குளம் கிராமம் வீரமணி மகன் சாமுவேல் (19) நின்று கொண்டிருந்தாா்.
அவரை சோதனையிட்ட போது, விற்பனைக்காக கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சாமுவேலை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்த கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனா்.