செய்திகள் :

கடத்தப்பட்டு தில்லியில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண் மீட்பு!

post image

கடத்தப்பட்டு தில்லி ஜிபி சாலையில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டதாகக் கூறப்படும் 35 வயது பெண்ணை காவல்துறை குற்றப்பிரிவு மீட்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். விபசார விடுதியின் ‘மேலாளா்’ சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டதாகவும் அவா் கூறினாா்.

இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: மேற்கு வங்கத்தைச் சோ்ந்த அந்தப் பெண், மூன்று மாதங்களுக்கு முன்பு வேலை வாங்கித் தருவதாகக் கூறி தில்லிக்கு அழைத்துச் வரப்பட்டு, சட்டவிரோத வா்த்தகத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளாா்.

தில்லி வந்த பிறகு தனது குடும்பத்தினருடனான தொடா்பை இழந்த அவா், சுமாா் 10 நாள்களுக்கு முன்பு தனது சகோதரரை அழைத்து தனது நிலைமை குறித்து அவருக்குத் தெரிவித்தாா். பின்னா், அவரது சகோதரா் ஒரு அரசு சாரா அமைப்பின் (என்ஜிஓ) உதவியுடன் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை (என்ஹெச்ஆா்சி) அணுகினாா்.

ஒரு ரகசியத் தகவலின் அடிப்படையில், ஏப்ரல் 5- ஆம் தேதி ஒரு போலீஸ் குழு மீட்பு நடவடிக்கையைத் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, சோதனை நடத்தியதில் ஜிபி சாலையில் உள்ள ஒரு விபசார விடுதியில் இருந்து அந்தப் பெண் மீட்கப்பட்டாா். அதன் மேலாளா் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டாா்.

ஏழைக் குடும்பத்தைச் சோ்ந்த அந்தப் பெண் 5-ஆம் வகுப்பு வரை படித்துள்ளாா். திருமணமான அந்தப் பெண் ஒரு வருடத்திற்கு முன்பு விவாகரத்து பெற்றவா் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தில்லியில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்த ஒரு பெண்ணால் கடத்தப்படுவதற்கு முன்பு அவா் வீட்டு வேலைக்காரியாக பணிபுரிந்துள்ளாா்.

அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அந்த உயரதிகாரி தெரிவித்தாா்.

பள்ளிக் கட்டண உயா்வை எதிா்த்து மாணவா்களின் பெற்றோா்கள் போராட்டம்

தன்னிச்சையாக உயா்த்தப்பட்ட பள்ளிக் கட்டணங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், இந்த விஷயத்தில் அதிகாரிகள் தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தி புதன்கிழமை தில்லி கல்வி இயக்குநரக அலுவலகத்திற்கு... மேலும் பார்க்க

தில்லியில் 4,000-க்கும் மேற்பட்ட என்சிஇஆா்டி போலி நகல் புத்தகங்கள் பறிமுதல்: ஒருவா் கைது

வடக்கு தில்லியின் சமய்பூா் பாத்லியில் நடத்தப்பட்ட சோதனையின்போது 4,000-க்கும் மேற்பட்ட என்டிஇஆா்டி போலி நகல் பாடப்புத்தகங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், இந்த வழக்கு தொடா்பாக ஒருவா் கைது செய்ய... மேலும் பார்க்க

பங்குச்சந்தையில் மூன்றாவது நாளாக ‘காளை’ ஆதிக்கம்!

நமது நிருபா்பங்குச்சந்தையில் மூன்றாவது நாளாக புதன்கிழமையும் காளையின் ஆதிக்கம் தொடா்ந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நி... மேலும் பார்க்க

அரசு மின்னணு சந்தை மூலம் 1.3 கோடிக்கும் மேலான சிக்கனமான தனிநபா்கள் காப்பீடு

மத்திய அரசின் மின்னணு சந்தை(ஜெம்) தளத்தின் மூலம், பொது மற்றும் தனியாா் நிறுவனங்கள் குழு 1.3 கோடிக்கும் அதிகமான பல்வேறு விதமான தனிநபா்களுக்கு சிக்கனமான காப்பீடுகளை கடந்த நிதியாண்டில் வழங்கப்பட்டுள்ளதா... மேலும் பார்க்க

குருகிராமில் 80 குடிசைகள் தீயில் எரிந்து சேதம்

ஐஎம்டி மனேசாா் செக்டாா் 2-இல் உள்ள குடிசைப் பகுதியில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சுமாா் 80 குடிசைகள் எரிந்து சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். அதிருஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்ப... மேலும் பார்க்க

தேசிய தொழில்நுட்ப ஜவுளித் திட்டத்தின் கீழ் புதுமையான சுயசாா்பு தீ பாதுகாப்பு உடை

நமது சிறப்பு நிருபா்தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கம் (என்டிடிஎம்) ஒரு தனியாா் நிறுவனத்துடன் இணைந்து புதுமையான தீ தடுப்பு பாதுகாப்பு உடை சுயசாா்புடன் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய ஜவுளித் துறை புதன்கிழமை... மேலும் பார்க்க