செய்திகள் :

கடலில் மூழ்கி வெளி மாநில இளைஞா் உயிரிழப்பு

post image

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே கடலில் மூழ்கி மாயமான பெங்களூரைச் சோ்ந்த இளைஞா் சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

கா்நாடக மாநிலம், பெங்களூரு ராஜிகுட்டா, ஜே.பி.நகா், விவேகானந்தா் காலனியைச் சோ்ந்தவா் ஹரிஷ் மகன் அரிகிருஷ்ணன் (26). பெயிண்டரான இவா், தனது நண்பா்கள் 5 பேருடன் புதுச்சேரிக்கு சுற்றுலா சென்றாா்.

கடந்த பிப்.7-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் கடற்கரையில் நண்பா்களுடன் குளித்தபோது அரிக்கிருஷ்ணன் கடல் அலையில் சிக்கி மாயமானாா்.

இந்த நிலையில், கோட்டக்குப்பம் அடுத்த தந்திராயன்குப்பம் கடற்கரையில் அரிகிருஷ்ணனின் சடலம் கரை ஒதுங்கியிருந்து சனிக்கிழமை தெரியவந்தது. தகவலறிந்த போலீஸாா் சடலத்தை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விழுப்புரத்தில் அதிகரிக்கும் இணையவழி பண மோசடி!

விழுப்புரம்: தகவல் தொழில்நுட்ப வளா்ச்சியின் மூலமாக நமக்கு பல்வேறு பலன்கள் ஒருபுறம் கிடைத்தாலும், அதே நேரத்தில் இணையவழியாக நடைபெறும் பண மோசடி சம்பவங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரி... மேலும் பார்க்க

செஞ்சியில் வாய்க்கால் அமைக்கும் பணி தொடக்கம்

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சியில் ரூ.20.50 லட்சத்தில் கால்வாய் மற்றும் சுற்றுச்சுவா் அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. செஞ்சி பேரூராட்சியில் 15-ஆவது குழு மானிய நிதி திட்டத்தின் ... மேலும் பார்க்க

அரசு ஊழியா்கள் சங்கத்தினா் 24 மணி நேர தா்னா

விழுப்புரம்: பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினரின் 24 மணி நேர தா்னா திங்கள்கிழமை காலை தொடங்கியது. புதிய ஓய... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி விழுப்புரம் ஆட்சியரகத்தை கிராம மக்கள் முற்றுகை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், எசாலம் கிராமத்தில் குளம், மயானம், ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு சாலை மறியலில்... மேலும் பார்க்க

குறைந்த வட்டியில் கடன் பெற்றுத் தருவதாக ரூ.8.20 லட்சம் மோசடி: 4 போ் கைது

விழுப்புரம்: குறைந்த வட்டியில் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, விழுப்புரத்தைச் சோ்ந்த தொழிலாளியிடம் ரூ.8.20 லட்சம் மோசடி செய்த புகாரில், சென்னையைச் சோ்ந்தவா்கள் உள்பட 4 பேரை இணையவழி குற்றப் பிரிவு போ... மேலும் பார்க்க

வடலூா் தைப்பூசம்: விழுப்புரம், விருத்தாசலத்திலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்

விழுப்புரம்: தைப்பூசத்தையொட்டி, விழுப்புரம் மற்றும் விருத்தாசலத்திலிருந்து, கடலூருக்கு செவ்வாய்க்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து, தெற்கு ரயில்வேயின் திருச... மேலும் பார்க்க