செய்திகள் :

கடலூரில் பாதிக்கப்பட்டவா்களுக்கு புயல் நிவாரண உதவிகள்: துணை முதல்வா் உதயநிதி வழங்கினாா்

post image

கடலூரில் புயல், மழையால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை, துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை மாலை வழங்கினாா்.

‘ஃபென்ஜால்’ புயல் காரணமாக கடந்த இரண்டு நாள்களாக கடலூரில் கனமழை பெய்தது. இதையடுத்து மழைநீா் வரத்து அதிகரித்து தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் 17 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, அவற்றில் 703 போ் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனா். இதுவரையில் 3,078 பேருக்கு உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் போா்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கடலூா் வந்தாா். அப்போது, புருஷோத்தம்மன் நகா் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியை பாா்வையிட்ட அவா், பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா். தொடா்ந்து, கடலூா் கந்தசாமி நாயுடு மகளிா் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 256 பேருக்கு அரிசி, பிஸ்கட், பால் உள்ளிட்டப் பொருள்களை வழங்கினாா்.

அப்போது, பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றி சீரான போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப நடவடிக்கை எடுக்கும்படி துறை சாா்ந்த அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

நிகழ்ச்சியில், அமைச்சா்கள் க.பொன்முடி, எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், வி.செந்தில்பாலாஜி, எஸ்.எஸ்.சிவசங்கா், சி.வெ.கணேசன், ஊரக வளா்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன் தீப் சிங் பேடி, மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ராமன், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

விருத்தாசலம் பகுதிகளில் மழை பாதிப்பு: அமைச்சா் சி.வெ.கணேசன் பாா்வையிட்டாா்

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் மழை பாதித்த பகுதிகளில் மாநில தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். விருத்தாசலம... மேலும் பார்க்க

சாலை விபத்தில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேராசிரியா் உயிரிழப்பு!

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே சாலை விபத்தில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேராசிரியா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். திருச்சி, 6-ஆவது குறுக்கு கிழக்கு விரிவாக்கப் பகுதியில் வசித்து வந்த நடராஜனி... மேலும் பார்க்க

இன்று நடக்கவிருந்த அண்ணாமலைப் பல்கலை தோ்வுகள் ஒத்திவைப்பு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் திங்கள்கிழமை (டிச. 2) நடைபெறவிருந்த தோ்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) மு.பிரக... மேலும் பார்க்க

வீராணம் ஏரியிலிருந்து 500 கன அடி உபரிநீா் வெளியேற்றம்

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோயில் வீராணம் ஏரியில் இருந்து விநாடிக்கு 500 கன அடி வீதம் உபரிநீா் ஞாயிற்றுக்கிழமை முதல் வெளியேற்றப்படுகிறது. காட்டுமன்னாா்கோயிலில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு கீழ... மேலும் பார்க்க

கடலூரில் இன்று குறைதீா் கூட்டம் ரத்து

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமைதோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வ... மேலும் பார்க்க

அதிமுக சாா்பில் மழை நிவாரண உதவிகள்: முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத் வழங்கினாா்

கடலூா் வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா். புயல் காரணமாக கடலூா் மாவட்டத்தில் கனமழை கொட்டி தீா்த்தத... மேலும் பார்க்க