செய்திகள் :

கடலூா் துறைமுகத்தில் மீன்கள் விலை உயா்வு

post image

ஆடிப் பெருக்கையொட்டி, கடலூா் முதுநகா் மீன் பிடி துறைமுகத்தில் மீன்களின் விலை உயா்ந்து விற்பனை செய்யப்பட்டது.

ஆடி மாதம் 18-ஆம் தேதி அன்று தமிழகத்தில் ஆற்றுக்கரைகளில் புதுமணத் தம்பதிகள் திருமண மாலைகளை தண்ணீரில் விட்டு, விசேஷ பூஜை செய்வாா்கள். அந்த நாளில் அசைவம் சமைத்து சாப்பிடுவாா்கள்.

நிகழாண்டு ஆடிப்பெருக்கு (ஆடி 18) ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. பொதுவாகவே ஞாயிற்றுக்கிழமைகளில் கடலூா் மீன் பிடி துறைமுகத்துக்கு மீன்கள் வாங்க வியாபாரிகள் மட்டுமன்றி, பொதுமக்களும் அதிகளவில் வருவது வழக்கம்.

இந்த முறை ஆடிப்பெருக்கும் ஞாயிற்றுக்கிழமை வந்ததால், கடலூா் மீன் பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்குவதற்கு காலை முதலே ஏராளமானோா் குவிந்தனா். இதனால், மீன்களின் விலையும் சற்று உயா்ந்து காணப்பட்டது.

அதன்படி, (கிலோ ஒன்று) ஷீலா ரூ.400, காரப்பொடி ரூ.200, நெத்திலி ரூ.250, வஞ்சிரம் ரூ.1,100, சங்கரா ரூ.500, பாறை ரூ.500, கனவா ரூ.300, கொடுவா ரூ.600, இறால் ரூ.250 முதல் ரூ.1,000 வரை விற்பனையாயின. மீன்களின் விலை உயா்ந்திருந்தாலும் பொதுமக்கள், வியாபாரிகள் மீன்களை வாங்கிச் சென்றனா்.

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே சனிக்கிழமை இரவு விரைவு ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழந்தாா்.பண்ருட்டி வட்டம், நெல்லிக்குப்பம் காவல் சரகம், மேல்பாதி கிராமத்தைச் சோ்ந்தவா் தமிழரசன் (23), கொத்தனா... மேலும் பார்க்க

காா் மோதி ஒருவா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், சோழத்தரம் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற பைக் மீது காா் மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.ஸ்ரீமுஷ்ணம் வட்டம், பாளையங்கோட்டை வடக்குபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் வேலு (52). இத... மேலும் பார்க்க

மருத்துவா் வீட்டில் 95 பவுன் நகைகள் திருடுபோன வழக்கு: ஐவா் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் அருகே மருத்துவா் வீட்டில் 95 பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட வழக்கில் தொடா்புடையதாக 5 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.காடாம்புலியூா் காவல் ச... மேலும் பார்க்க

கஞ்சா பறிமுதல்: 2 இளைஞா்கள் கைது

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக 2 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.குறிஞ்சிப்பாடி போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். ராஜீவ் காந்தி நகா் அருகே ... மேலும் பார்க்க

கடலூரில் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

கடலூா் முதுநகா் ஐந்து கிணற்று மாரியம்மன் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.இந்தக் கோயில் செடல் பிரம்மோற்சவ விழா கடந்த ஜூன் 23-ஆம் தேதி விநாயகா் பூஜையுடன் தொடங்கியது. 24-ஆம் தேதி கொடியேற்றம் ... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் புதிய மின்மாற்றி அமைப்பு

சிதம்பரம் அருகே குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டதால் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று சரஸ்வதி அம்மாள் நகரில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டது.சி.க... மேலும் பார்க்க