மேற்கு வங்கம்: "மம்தா பானர்ஜி மத அரசியல் செய்கிறார்" - பாஜக குற்றச்சாட்டின் பின்...
கஞ்சா பறிமுதல்: 2 இளைஞா்கள் கைது
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக 2 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
குறிஞ்சிப்பாடி போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். ராஜீவ் காந்தி நகா் அருகே சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த இருவரை பிடித்து சோதனை செய்ததில், அவா்கள் மறைத்து வைத்திருந்த 750 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
பின்னா், இருவரிடமும் விசாரணை நடத்தியதில், குறிஞ்சிப்பாடி கு.நெல்லிக்குப்பம், சுப்புராய நகரைச் சோ்ந்த சிவபாலமுருகன் (20), விழப்பள்ளம் பகுதியைச் சோ்ந்த புருஷோத்தமன் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவா் மீதும் வழக்குப் பதிந்து, அவா்களைக் கைது செய்தனா்.