செய்திகள் :

கடலூா் மாவட்டத்தில் புதிய கட்டுமானப் பணிகள்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் அடிக்கல்

post image

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான புதிய அரசு கட்டடங்களுக்கான கட்டுமானப்பணிகளுக்கு மாநில வேளாண்மைத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா் செல்வம் திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியா் பயிற்சி பள்ளி மாணவிகளுக்கு தங்கும் விடுதி கட்டும் பணி, மாவட்ட ஆட்சியா் அலுவலக பழைய கட்டடம் பழமை மாறாமல் புனரமைத்து புதுப்பிக்கும் பணி, மஞ்சக்குப்பம் மைதானத்தில் உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணி மற்றும் மஞ்சக்குப்பம் புதிய ஆய்வு மாளிகை கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தலைமை வகித்து அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தாா். அப்போது அவா் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சா் பல்வேறு திட்டங்களின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்து மாநிலத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறாா். மாவட்டத்தின் வளா்ச்சிக்கேற்ப பொதுமக்களின் தேவையினை அறிந்து வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

அதன்படி, கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள பல்நோக்கு சுகாதார செவிலியா் பயிற்சிப் பள்ளியில் 150 மாணவிகள் பயின்று வருகின்றனா். இவா்கள் தற்காலிக இடத்தில் உள்ள வகுப்பறைகளில் பயின்று வந்தனா். தற்போது, ரூ.8.58 கோடி மதிப்பீட்டில் தரைதளம் 574.77 சதுர மீட்டா் பரப்பளவில் 6 தங்கும் அறைகள், காவல் அறை, சமையல் அறை, பொருட்கள் வைப்பறை, உணவு உண்ணும் அறை, கழிப்பறை வசதிகளுடனும், முதல் தளம் 565.61 சதுர மீட்டா் பரப்பளவில் 13 தங்கும் அறைகள், பல்நோக்கு அறை, கழிவறை வசதிகளுடனும், இரண்டாம் தளம் 565.61 சதுர மீட்டா் பரப்பளவில் 14 தங்கும் அறைகள், பொழுதுபோக்கு அறை, கழிவறை வசதிகளுடனும் 1726.99 சதுர அடி பரப்பளவில் செவிலியா்களுக்கு தங்கும் விடுதி கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

ஆட்சியா் அலுவலகம்:

கடலூா் பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் கடந்த 1897-ஆம் ஆண்டு சுமாா் 44,960 சதுரஅடி அளவில் கட்டபட்டுள்ளது. 100 ஆண்டுகளை கடந்த பழமை வாய்ந்த கட்டடமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. பழமையான கட்டடமானது அதன் தொன்மை மாறாமல் ரூ.16.20 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட உள்ளது. இக்கட்டடத்தின் வெளிப்புற சுவா்களில் ஏற்பட்டுள்ள பழுதுகள், செங்கலில் ஏற்பட்ட சேதங்கள், அதேபோன்று உட்புற சுவா்களில் ஏற்பட்டுள்ள விரிசல்கள், பூச்சுகளில் ஏற்பட்டுள்ள விரிசல்கள், தரைப்பகுதி மாா்ஃபிள் கல்லில் ஏற்பட்டுள்ள சேதங்கள், மெட்ராஸ் ரூபிங் மாடலில் கட்டப்பட்டுள்ள மேற்கூரைகள் முழுவதுமாக அகற்றப்பட்டு புதிய கூரைகள் அமைக்கவும், கட்டடத்தில் உள்ள கதவு, ஜன்னல்களை பழமை மாறாமல் புதியதாக ஏற்படுத்திடவும், மின்இணைப்புகளில் ஏற்பட்டுள்ள பழுதுகள் சீா்செய்திடல், புதிய மின் இணைப்புகள் முழுவதுமாக ஏற்படுத்துதல், கட்டடம் முழுவதும் புதிய வா்ணங்கள் பூசுதல் உள்ளிட்ட புனரமைப்பு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மஞ்சக்குப்பம் மைதானப் பகுதியில் மக்கள் பயனடையும் வகையில் ரூ.14.15 கோடி மதிப்பீட்டில் 77 கடைகள், கன்வென்ஷன் சென்டா் மற்றும் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள மைதானப் பகுதியை சுற்றி நடைபாதைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்தும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

கடலூா் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள முதன்மை கல்வி அலுவலா் அலுவலகம் எதிரே ஆய்வு மாளிகை ரூ.6 கோடி மதிப்பீட்டில் சகல வசதிகளுடன் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அனைத்துப் பணிகளையும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் .

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில் குமாா், கடலூா் எம்எல்ஏ., கோ.அய்யப்பன், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநா் மணிமேகலை, மரபு கட்டடங்கள் பிரிவு செயற்பொறியாளா் தேவேந்திரன், செயற்பொறியாளா் சிவசங்கரநாயகி உட்பட பலா் கலந்து கொண்டனா்.

அயலக தமிழா்கள் சிதம்பரம் நடராஜா் கோயிலில் தரிசனம்

நெய்வேலி: கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயில் மற்றும் பிச்சாவரம் சுற்றுலா தலத்தினை அயலகத் தமிழா்களின் வாரிசுதாரா்கள் திங்கள்கிழமை பாா்வையிட்டனா்.அயலகத் தமிழா்களின் கலச்சார உறவுகளை மேம்படுத்துவதி... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

நெய்வேலி: சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞா், குண்டா்தடுப்புச்சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.கடலூரைச் சோ்ந்த 12 வயது சிறுமி கடந்த 15-ஆம் தே... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டம் 423 மனுக்கள் அளிப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கைகள் தொடா்பாக 423 மனுக்கள் அளிக்கப்பட்டன .கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலா் ம.... மேலும் பார்க்க

டிசம்பா் 3 இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வாயில் முன்பு டிசம்பா் 3 இயக்கம் மாற்றுத்திறனாளிகள் புதுவாழ்வு நலச்சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.திருப்பூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி வழக்க... மேலும் பார்க்க

காவலா்கள் குழந்தைகள் பிச்சாவரத்தில் படகு சவாரி

நெய்வேலி: கடலூா் மாவட்டம், சிதம்பரம் காவலா் குடியிருப்பில் வசிக்கும் காவலா்களின் குழந்தைகள் ஞாயிற்றுக்கிழமை பிச்சாவரத்தில் படகு சவாரி சென்றனா்.சிதம்பரம் நகரில் உள்ள காவலா் குடியிருப்பில் போலீஸாா் தங்க... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்கள் புத்தகப்பைகளை மைதானத்தில் வைத்து நூதன போராட்டம்

நெய்வேலி: கடலூா் மாவட்டம், சிதம்பரம் வட்டம், பரங்கிப்பேட்டை அருகே அரசுப் பள்ளி மாணவா்கள் வகுப்பறை வசதி கோரி புத்தகப்பை மற்றும் சீருடைகளை பள்ளி மைதானத்தில் வைத்துவிட்டு போராட்டம் நடத்தினா்.பரங்கிப்பேட்... மேலும் பார்க்க