Budget 2025 : `'இந்த' வரிக்கு சிங்கப்பூர் மாடல்’ - வரவிருக்கும் பட்ஜெட் குறித்து...
கடல் ஆமைகளைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
அழிந்துவரும் இனமான ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகளைக் காக்க, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
உலகில் வேகமாக அழிந்துவரும் கடல் ஆமை இனங்களில் ஒன்றான ஆலிவ் ரிட்லி எனப்படும் சிற்றாமைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதற்கு ஏற்ற இடமாக, வங்கக் கடற்கரை பகுதிகள் கருதப்படுகின்றன. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பா் மாதத்தில் தொடங்கி மாா்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில், உலகின் பல்வேறு நாட்டு கடல்களிலும் வாழும் ஆலிவ் ரிட்லி ஆமைகள், பல்லாயிரக்கணக்கான கடல் மைல் தொலைவுக்கு பயணம் செய்து வங்கக் கடலோரத்துக்கு வருகின்றன.
ஒடிஸாவின் கஹிா்மாதா, ருசிகுல்யா கடற்கரைக்குச் செல்லும் கடல் ஆமைகள் எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் முட்டையிட்டு குஞ்சு பொரித்துச் செல்லும் நிலையில், தமிழகத்தில் சென்னை பழவேற்காடு முதல் கல்பாக்கம் வரையிலான கடற்கரைக்கு முட்டையிடுவதற்காக வரும் ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் மட்டும் கொத்துக் கொத்தாக உயிரிழப்பது பெரும் கவலையளிக்கிறது.
சென்னைக்கும் கல்பாக்கத்துக்கும் இடைப்பட்ட பகுதிகளில் கடல் ஆமைகள் அதிகளவில் கொல்லப்படுவதற்கு அந்தப் பகுதிகளில் இழுவைப் படகுகளை பயன்படுத்தியும், நீண்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தியும் மீனவா்கள் மீன்கள் பிடிக்கப்படுவதுதான் காரணம். கடற்கரையிலிருந்து 5 கடல் மைல் தொலைவில்தான் கடல் ஆமைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், அந்தப் பகுதிகளில் கடல் ஆமைகள் முட்டையிடும் காலத்தில், இழுவைப் படகுகளையும், நீண்ட வலைகளையும் பயன்படுத்துவதற்கு, 1983-ஆம் ஆண்டின் தமிழ்நாடு கடல்பகுதி மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின்படி தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தத் தடை முழுமையாக செயல்படுத்தப்படாதது தான் ஆயிரக்கணக்கில் ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் கொல்லப்படுவதற்கு முதன்மைக் காரணம் ஆகும்.
ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் காலத்தில் பின்பற்றப்பட வேண்டிய அனைத்து விதிகளும் கடைப்பிடிக்கப்படுவதை, தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டும். அதன் மூலம் ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதற்கு மிகவும் பாதுகாப்பான பகுதியாக சென்னை பழவேற்காடு - கல்பாக்கம் இடையிலான கடற்கரையை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.