செய்திகள் :

கடினமான வளர்ச்சிப் பணிகளை கைவிடுவது காங்கிரஸின் இயல்பு: பிரதமர் மோடி

post image

கடினமான எந்தவொரு வளர்ச்சிப் பணியையும் கைவிடுவது காங்கிரஸின் "இயல்பான பழக்கம்" என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.

அருணாச்சலப் பிரதேசத்தில் ரூ. 5,100 கோடிக்கும் அதிகமான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி. அதன்பின்னர் வர்த்தகர்கள் மற்றும் வரி செலுத்துவோர் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். அவர்களிடம் ஜிஎஸ்டி வரி குறைப்பால் ஏற்பட்ட நன்மைகள் குறித்துக் கேட்டறிந்தார்.

பின்னர் இட்டா நகரில் உள்ள இந்திரா காந்தி பூங்காவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசியதாவது,

அருணாச்சலப் பிரதேசம் அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் பூமி. வடகிழக்கு மாநிலத்தை தில்லியில் இருந்து மேம்படுத்த முடியாது என்பது தனக்குத் தெரியும் என்பதால், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை அடிக்கடி இந்தப் பகுதிக்கு அனுப்பியதாகவும், 70 முறைக்கு மேல் வடகிழக்கு மாநிலங்களுக்குத் தான் வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

காங்கிரஸின் உள்ளார்ந்த பழக்கம் என்னவென்றால், அவர்கள் ஒருபோதும் கடினமான வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள மாட்டார்கள். காங்கிரஸ் ஆட்சியில் வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டது.

நவராத்திரியின் முதல் நாளில் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் தொடங்கப்படுவதன் மூலம், இந்த பண்டிகை காலத்தில் மக்கள் "இரட்டை வரவு " பெறுவார்கள். இன்று, நாடு முழுவதும் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

காங்கிரஸ் அதிக வரிச்சுமையை மக்கள் மீது சுமத்தியது. ஆனால் மோடி அரசு படிப்படியாக வரிகளைக் குறைத்து நிவாரணம் அளித்துள்ளது. அருணாசலில் இரண்டு மக்களவை தொகுதிகள் மட்டுமே உள்ளதால், எல்லை கிராமங்களைக் காங்கிரஸ் புறக்கணித்துள்ளது. இதனால் அந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக மோடி குற்றம் சாட்டினார்.

அருணாச்சலப் பிரதேசம் கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசிடமிருந்து ரூ.1 லட்சம் கோடியைப் பெற்றுள்ளது. இது காங்கிரஸ் ஆட்சியின் போது பெற்றதை விட 16 மடங்கு அதிகம் என்று அவர் கூறினார். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

குஜராத்தில் சரக்கு கப்பலில் பயங்கர தீ விபத்து(விடியோ)

குஜராத்தில் சரக்கு கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. குஜராத் மாநிலம், போர்பந்தர் சுபாஷ்நகர் ஜெட்டியில் நங்கூரமிட்டிருந்த சரக்கு கப்பல் திங்கள்கிழமை திடீரென தீப்பிடித்தது. ஜாம்... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் என்கவுன்டரில் நக்சல் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் நக்சல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். மகாராஷ்டிரத்தையொட்டிய அபுஜ்மாத்தில் உள்ள வனப் பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் குறித்த த... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீர்திருத்தம் மக்களிடையே தன்னம்பிக்கையை அதிகரிக்கும்: அமித் ஷா

நாடு முழுவதும் புதிய வரி அமைப்பு நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் பிரதமர் மோடியின் உறுதிப்பாட்டின் சான்றாகும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். இத... மேலும் பார்க்க

மும்பையில் வேகமாக வந்த சொகுசு கார் விபத்தில் சிக்கியது ! (விடியோ)

மும்பையில் கடற்கரை சாலையில் வேகமாக வந்த சொகுசு கார் தடுப்பு சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. மகாராஷ்டிர மாநிலம், தெற்கு மும்பையில் உள்ள கொலாபாவுக்கு அதிஷ் ஷா(52) லம்போர்கினி காரில் ஞாயிற்றுக்கிழம... மேலும் பார்க்க

திருப்பதியை வைத்து அரசியல் செய்வதா? ரூ.100 கோடி உண்டியல் பணம் குறித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்

திருப்பதி கோயிலை அரசியலுக்காகப் பயன்படுத்துவதா? என்று ஆந்திர மாநிலத்தை ஆளும் தெலுங்கு தேசம் - பாஜகவை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கேள்வி எழுப்பியிருக்கிறது.ஆந்திரம் மாநில முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ஆட்சியில... மேலும் பார்க்க

ஒடிசாவில் சுவர் இடிந்து பழங்குடியின தம்பதியர் பலி!

ஒடிசாவின் பலாசோர் மாவட்டத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது மண் சுவாரின் ஒருபகுதி இடிந்து விழுந்ததில் பழங்குடியின தம்பதியினர் உயிரிழந்தனர். ஞாயிற்றுக்கிழமை இரவு மாவட்டத்தில் உள்ள பாஸ்தா காவல் நில... மேலும் பார்க்க