வடிவேலுவின் கேங்கர்ஸ் டிரைலர்: யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம்!
கடுமையான விமர்சனங்களைப் பெறும் சிக்கந்தர்!
நடிகர் சல்மான் கான் நடித்த சிக்கந்தர் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் அகிரா படத்திற்கு பின் சில ஆண்டுகள் கழித்து மீண்டும் பாலிவுட்டில் சிக்கந்தர் என்ற படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் சல்மான் கான் நாயகனாகவும் ரஷ்மிகா மந்தனா நாயகியாகவும் நடித்துள்ளனர்.
ஆக்சன் திரைப்படமாக உருவான இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
நீண்டகாலமாக ஹிட் இல்லாமல் இருக்கும் சல்மான் கானுக்கு இப்படம் வெற்றியைக் கொடுக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், கதை மற்றும் திரைக்கதை சொதப்பலால் இப்படம் மோசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். முக்கியமாக, படத்திற்கான விமர்சனங்களும் கடுமையாக உள்ளதால் வணிக ரீதியாகவும் இப்படம் பாதிப்படையும் என்றே தெரிகிறது.
இதையும் படிக்க: வெளியானது குட் பேட் அக்லி இரண்டாவது பாடல்!