'ஸ்டாலின் கேட்டுக் கொண்டதால் ஈரோடு கிழக்கில் காங் போட்டியில்லை!' - செல்வப்பெருந்...
கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தமிம் இக்பால், அலெக்ஸ் ஹேல்ஸ்! என்ன பிரச்னை?
பிபிஎல் தொடரில் அலெக்ஸ் ஹேல்ஸ், தமிம் இக்பாலுக்கு கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பானது.
போட்டி முடிந்து கை குழுக்க சென்றபோது தமிம் இக்பால் தன்னை தனிப்பட்ட விதத்தில் பேசியதாக குற்றம்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
முதலில் விளையாடிய ஃபார்டியூன் பாரிஷல் அணி 20 ஓவர்கள் முடிவில் 197/5 ரன்கள் அடித்தது. இதில் தமிம் இக்பால் 40 ரன்களும் கைல் மேயர்ஸ் 61 ரன்களும் எடுத்தார்கள்.
அடுத்து விளையாடிய ராங்க்பூர் ரைடர்ஸ் 20 ஓவர் முடிவில் 202/7 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக இஃப்திகார் அகமது 48, குஷிதி ஷா 48 ரன்கள் எடுத்தார்கள்.
இந்தப் போட்டியில் அலெக்ஸ் ஹேல்ஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதி ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் நூரூல் ஹாசன் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடித்து அசத்தினார்.
த்ரில் வெற்றி பெற்ற ராங்க்பூர் ரைடர்ஸ் ஆக்ரோஷமாக கொண்டாடினார். ஃபார்டியூன் பாரிஷல் அணியினர் கடுப்பாகினர்.
இரு அணியினரும் கை குழுக்க வரும்போது தமிம் இக்பால் கோபமாக இருப்பதை காமிராவில் காட்டினர். இந்த சண்டை முழுவதுமாக காமிராவினால் காட்டப்படவில்லை.
தமிம் இக்பால் சகோதரர் கூறியதாவது:
எனக்கு முழுவதுமாக என்ன நடந்தது எனத் தெரியவில்லை. ஆனால், தமிம் வருத்தமடைந்திருந்ததை பார்க்க முடிந்தது. மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தார். எதிரணியினர் எதாவது சொன்னதால் இவர் கோபமாயிருக்கக் கூடும். இது பெரிய பிரச்னை இல்லை என்று நினைக்கிறேன் என்றார்.