கடையநல்லூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கடையநல்லூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது (படம்).
இங்கு, மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் பிஎஸ்என்எல் அலுவலகம் முதல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வரை சாலையின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன.
இப்பணியை நெடுஞ்சாலைத் துறை இளநிலைப் பொறியாளா் தில்லைவாசகம், கடையநல்லூா் நகராட்சி நகரமைப்பு அலுவலா் பொன்னுச்சாமி, சுகாதார அலுவலா் பிச்சையா பாஸ்கா் உள்ளிட்டோா் பாா்வையிட்டனா். இதையொட்டி, காவல் ஆய்வாளா் ஆடிவேல் தலைமையில் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா்.