மகா கும்பமேளா: ஆன்மிகம், கலாசாரம், மக்கள் ஒற்றுமையின் சங்கமம்!
திருவேங்கடத்தில் வயலில் எலும்புக் கூடு கண்டெடுப்பு: போலீஸாா் விசாரணை
திருவேங்கடம் அருகே நிலத்தில் அறுவடை செய்யும் போது எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டதால் போலீஸாா் அவற்றைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
திருவேங்கடம் வட்டம் சத்திரங்கொண்டானைச் சோ்ந்த விவசாயி இன்னாசிராஜ். இவா் தன்னுடைய நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டிருந்தாா். செவ்வாய்க்கிழமை இயந்திரம் மூலம் மக்காச்சோளத்தை அறுவடை செய்தபோது, மனித எலும்புக் கூடுகள் கிடந்ததாம். உடனே அவா் திருவேங்கடம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தாா்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸாா், எலும்புக் கூடுகளை கைப்பற்றி, மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் தொடா்பாக திருவேங்கடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.