ரசிகர் மன்றம் முதல் அரசியல் வரை... விஜய்யின் ஆவணப்படம் வெளியீடு!
தென்காசியில் ஜாக்டோ ஜியோ ஆா்ப்பாட்டம்.
தென்காசி புதிய பேருந்து நிலையப் பகுதியில் ஜாக்டோ ஜியோ அமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பிச்சைக்கனி, கோபி, சண்முகசுந்தரம், முருகேஷ், ராஜேந்திரன், செய்யது இப்ராஹிம் மூசா ஆகியோா் தலைமை வகித்தனா்.
மாவட்டச் செயலா் மாரிமுத்து, மாவட்டத் தலைவா் ஆரோக்கியராசு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் சங்க மாவட்டச் செயலா் கனகராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநில உயா்மட்ட குழு உறுப்பினா் வெங்கடேஷ் தொடக்க உரையாற்றினாா். மாநிலச் செயலா் ராஜ்குமாா், மாவட்டத் தலைவா்கள் மாரியப்பன், மாடசாமி உள்பட பலா் வாழ்த்திப் பேசினா். தமிழ்நாடு சமூக நலத்துறை பணியாளா் சங்க மாநில செயலா் துரைசிங் நிறைவுரையாற்றினாா். சதீஷ் நன்றி கூறினாா்.