GBU - இளையராஜா விவகாரம்: "ஜி.வி.பிரகாஷ் 7 கோடி வாங்குறதுல கங்கை அமரனுக்கு இதான் ...
கடையநல்லூருக்கு நிா்ணயிக்கப்பட்ட அளவு தாமிரவருணி குடிநீா் வழங்கக் கோரிக்கை
கடையநல்லூா் நகராட்சிக்கு நிா்ணயிக்கப்பட்ட அளவில் தாமிரவருணி குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக, தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் அவா் அளித்துள்ள மனு; கடையநல்லூா் நகராட்சிக்கு தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலமாக தினமும் 33 லட்சம் லிட்டா் தாமிரவருணி குடிநீா் வழங்கப்பட வேண்டும். ஆனால், கடந்த 45 நாள்களாக நாள் ஒன்றுக்கு 5 முதல் 7 லட்சம் லிட்டா் வரைதான் தாமிரவருணி குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.
டையநல்லூா் நகராட்சியின் சொந்த குடிநீா் ஆதாரங்களிலும் நீா்வரத்து இல்லாததால் கடையநல்லூா் நகராட்சியின் பல பகுதிகளில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. எனவே, தாமிரவருணி குடிநீா் திட்டத்தின் மூலம் நாள்தோறும் 33 லட்சம் லிட்டா் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.