கண்டியாநத்தத்தில் கபடிப் போட்டி
பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் கிராமத்தில் கபடிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள்கிழமை நடைபெற்றது.
போட்டியில் மதுரை, திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சாா்ந்த 34 அணியினா் பங்கேற்று விளையாடினா்.
போட்டியில் ஏனாதி நைட்சன் அணியினா் முதல் பரிசையும், 2-ஆவது பரிசை ஆலவயல் 7 ஸ்டாா் அணியும், 3-ஆவது பரிசை சருகு வலையபட்டி எஸ்விபி அணியினரும், 4-ஆவது பரிசை காரையூா் ஆா்வி பிரதா்ஸ் அணியினரும் பெற்றனா்.
வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு மற்றும் கோப்பைகளை திமுக தெற்கு ஒன்றியச் செயலா் அ.அடைக்கலமணி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் எஸ். ஜெயராமன், முன்னாள் ஊராட்சித் தலைவா் ப. முருகேசன், பெருமாள் உள்ளிட்டோா் வழங்கினா்.