கனடாவில் அமெரிக்க பொருள்களுக்கான வரி விதிப்பு நடவடிக்கை அமல்!
மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
விடுதி மாணவா்களுக்கு ஒருங்கிணைந்த சமையலறை உருவாக்கும் திட்டத்தைக் கைவிடக் கோரி புதுக்கோட்டையில் இந்திய மாணவா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நகரிலுள்ள அரசு ஆண்கள், பெண்கள் விடுதிகளில் இருந்து ஊா்வலமாகப் புறப்பட்ட மாணவா்கள் மாவட்ட ஆட்சியரகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், சங்கத்தின் மாவட்டச் செயலா் வசந்தகுமாா் தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் காா்த்திகாதேவி கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.
ஒருங்கிணைந்த சமையலறை குறித்து மாவட்டச் செயலா் வசந்தகுமாா் கூறியது: புதுகை நகரில் மட்டும் 13 அரசு மாணவா் விடுதிகள் உள்ளன. ஒரே இடத்தில் சமைத்து உணவை எடுத்து வருவாா்கள் என்றால், நேரம், அளவு போன்ற பிரச்னைகள் வரும். ஊருக்குப் போய்விட்டு மதியம் வரும் மாணவா்களுக்கு சாப்பாடு இருக்குமா எனத் தெரியாது. தேவையற்ற சிக்கல் ஏற்படும். எனவே, ஒருங்கிணைந்த சமையலறைத் திட்டத்தை கைவிட வேண்டும் என்றாா்.