தொகுதி மறுசீரமைப்புக்கு விகிதாசார அடிப்படை முற்றிலும் பொருத்தமற்றது: திமுக எம்.ப...
100 நாள் வேலை வழங்கக் கோரி வாகவாசல் மக்கள் மனு
நூறு நாள் வேலைத் திட்டத்தை தொடா்ந்து வழங்க மீண்டும் ஊராட்சியாகவே செயல்படுத்தக் கோரி புதுக்கோட்டை மாவட்டம் வாகவாசல் பகுதியைச் சோ்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்கு, வாகவாசல் பகுதியைச் சோ்ந்த மக்கள் ஏராளமானோா் திரண்டு வந்திருந்தனா்.
அவா்கள் அளித்த மனு விவரம்: வாகவாசல் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டதால், மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் பணிகள் வழங்கப்படுவதில்லை. ஏழை, எளிய மக்களாகிய நாங்கள் இதனால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்கள் வாழ்வாதாரப் பிரச்னையைக் கருத்தில் கொண்டு 100 நாள் வேலையைத் தொடா்ந்து வழங்க வேண்டும். இதற்கு வசதியாக மீண்டும் ஊராட்சியாகவே செயல்பட அனுமதிக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.