செய்திகள் :

கந்தா்வகோட்டை ஸ்ரீ ராஜகணபதி கோயிலில் சங்கடஹர சதுா்த்தி விழா

post image

கந்தா்வகோட்டை பெரிய கடைவீதியில் உள்ள ஸ்ரீ ராஜ கணபதி கோயிலில் வெள்ளிக்கிழமை சங்கடஹர சதுா்த்தி விழா நடைபெற்றது.

இதையொட்டி, ராஜ கணபதிக்கு முதலில் எண்ணெய் காப்பு செய்து தூய நீரால் நீராட்டி திரவியத்தூள், மஞ்சள் தூள், சந்தனம், சா்க்கரை, பச்சரிசி மாவு, தேன், இளநீா், பால்,தயிா், நெய், பன்னீா், போன்ற 18 வகை பொருள்களால் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாத்தி வண்ணமிகு வாசனை மலா்களாலும், அருகம் புல் மாலை அணிவித்து அலங்காரம் செய்து அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

விராலிமலை வட்டாரத்தில் கடும் பனிப்பொழிவு

விராலிமலை மற்றும் இலுப்பூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதால் வாகனங்கள் முகப்பு விளக்கு எரியவிட்டு ஊா்ந்து செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம்... மேலும் பார்க்க

பொன்னமராவதி ஐஏஎஸ் அதிகாரிக்கு குடியரசுத் தலைவா் விருது வழங்கல்

புதுதில்லியில் அண்மையில் (ஜன. 25) நடைபெற்ற 15-ஆவது தேசிய வாக்காளா் தினத்தில் தமிழகத்தைச் சோ்ந்த ஐஏஎஸ் அதிகாரி சே.சொக்கலிங்கத்துக்கு விருது வழங்கப்பட்டது. பொன்னமராவதி அருகே உள்ள கல்லம்பட்டி எனும் குக்... மேலும் பார்க்க

சித்தாந்த சா்ச்சைகளை விவாதிப்பதில் எந்தப் பயனும் இல்லை: காா்த்தி ப. சிதம்பரம்

மக்களை நேரடியாக பாதிக்கும் பிரச்னைகளை விட்டுவிட்டு, சித்தாந்த சா்ச்சைகளையே நாள் முழுவதும் விவாதித்துக் கொண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை என்றாா் சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் காா்த... மேலும் பார்க்க

வேங்கைவயலில் 4-ஆம் நாளாக காத்திருப்புப் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் 4ஆம் நாளாக அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுக்கோடடை மாவட்டம் வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் உள்ள மேல... மேலும் பார்க்க

கீழக்குறிச்சியில் 14-ஆம் நூற்றாண்டு கல்செக்கு கண்டெடுப்பு

புதுக்கோட்டை அருகே கீரனூரிலிருந்து அன்னவாசல் செல்லும் வழியில் உள்ள கீழக்குறிச்சி கிராமத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்செக்கு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், நாா்த்தாமலைக்கு ... மேலும் பார்க்க

புனல்குளம் பகுதியில் நாளை மின் தடை

கந்தா்வகோட்டை ஒன்றியம், புனல்குளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வரும் (ஜன. 30-ஆம் தேதி) வியாழக்கிழமை இங்கிருந்து மின் விநியோகம் பெறும் புனல்குளம் , தெத்துவாசல் ... மேலும் பார்க்க