காய்ச்சல், கடுங்குளிர், அட்டைக்கடி! சந்திச்சதே இல்ல இப்படியொரு ஷூட்டிங்!- `சின்ன...
கனடா பிரதமா் பதவிக்கு இந்திய வம்சாவளி எம்.பி. போட்டி
கனடா பிரதமா் பதவிக்குப் போட்டியிடுவதாக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாடாளுமன்ற உறுப்பினா் சந்திர ஆா்யா அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளாா்.
கா்நாடக மாநிலத்தை பூா்விகமாகக் கொண்ட அவா் கடந்த 2006-ஆம் ஆண்டில் கனடாவுக்குக் குடிபெயா்ந்தாா். இந்திய-கனடா ஒட்டாவா தொழில் கூட்டமைப்பின் தலைவராக அவா் இருந்துள்ளாா். கனடா நாடாளுமன்றக் கீழவையின் உறுப்பினராக 2015, 2019, 2021 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தோ்தல்களில் அவா் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
நாட்டில் காலிஸ்தான் ஆதரவாளா்களுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட சந்திர ஆா்யா, தற்போதைய பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளதையடுத்து, காலியாகவிருக்கும் அந்தப் பதவிக்குப் போட்டியிடுகிறாா்.