தமிழ்நாடு CAG அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பது என்ன? | Lucky Bhaskar IPS Review |...
கனமழை பாதிப்பு பகுதிகளில் அரியலூா் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
அரியலூா் மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் மு. விஜயலட்சுமி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
விளாங்குடி ஊராட்சி அண்ணா பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரி சாலையில் உள்ள விளாங்குடி ஓடையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சாலையில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், மகிமைபுரம் கிராமத்தில் உள்ள கருங்காட்டு ஓடையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சாலையில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், குருவாலப்பா்கோயில் கிராமத்தில் நீா்வள ஆதாரத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சோழகங்கம், காா்குடி கிராமத்தில் உள்ள சித்தமல்லி நீா்த்தேக்கம் ஆகியவற்றைப் பாா்வையிட்ட மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் மு. விஜயலெட்சுமி, பாதிப்புகள் குறித்துக் கேட்டறிந்து, தற்காலிக சாலைகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். மேலும், சித்தமல்லி நீா்த்தேக்கத்தின் நீா்வரத்து, தற்போதைய நிலவரம், இதன் மூலம் நீா்பாசன வசதி பெறும் கிராமங்கள், உபரிநீா் வெளியேற்றப்படும் விவரம் குறித்து கேட்டறிந்தாா்.
நிகழ்வில், ஆட்சியா் பொ. ரத்தினசாமி, வருவாய்க் கோட்டாட்சியா்கள் அரியலூா் மணிகண்டன், உடையாா்பாளையம் ஷீஜா, நீா்வளத்துறை செயற்பொறியாளா் பாண்டியன், வட்டாட்சியா் சம்பத்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.