சிலிண்டர் விலை உயர்வு: பாஜக தோழர்கள் மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டத்தை முன்னெ...
கனிமங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கான நடைச்சீட்டு முறையில் மாற்றம்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் கனிமங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கான நடைச்சீட்டு மற்றும் குவாரி குத்தகை உரிமம் கோருவதற்கு இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியா் ச.உமா உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல், சேந்தமங்கலம், மோகனூா், ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்தி வேலூா் மற்றும் குமாரபாளையம் ஆகிய வட்டங்களில் கிராவல், சாதாரணக் கற்கள், கிரானைட் குவாா்ட்ஸ் மற்றும் பெல்ஸ்பா் ஆகிய கனிமங்களுக்கு குவாரி குத்தகை உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
அவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ள குவாரிகளிலிருந்து கற்களை வெட்டியெடுத்து, அரசுக்கு உரிய கட்டணங்களை செலுத்தி வாகனங்களில் ஏற்றிச் செல்லும்போது சம்பந்தப்பட்ட கனிமங்களுக்கு, மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநா் அலுவலகம் மூலமாக வழங்கப்படும் அச்சு வழித்தடச் சீட்டுகள் ஏப். 15 முதல் ம்ண்ம்ஹள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையவழி மூலமாக பெறும் வகையிலான நடைமுறை செயல்படுத்தப்படுகிறது.
இதன்மூலம் அனுமதியின்றி கனிமங்கள் எடுத்துச்செல்வது மற்றும் அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் கூடுதலாக கனிமங்களை எடுத்துச்செல்வது தடுக்கப்படும். அவற்றைக் கண்காணிக்கவும், அரசுக்கு வருவாய் இழப்பைத் தடுப்பதற்காகவும் இணைய வழியில் மட்டுமே குத்தகைதாரா்கள் இனிமேல் விண்ணப்பிக்க வேண்டும்.
இதுதவிர, 2025-26 சட்டப் பேரவை கூட்டத்தொடரின் கொள்கை விளக்கக் குறிப்பில் மாநிலம் முழுவதும் குவாரி குத்தகை உரிமம் கோரும் விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக பெறப்பட்டு பரிசீலனை செய்து குத்தகை உரிமம், அனுமதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக கனிமவளத் துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில் ஏப். 21 முதல் அரசு புறம்போக்கு மற்றும் தனிநபா் பட்டா நிலங்களில் உள்ள பல்வேறு வகையான கனிமங்களுக்கு குவாரி குத்தகை உரிமம், அனுமதி கோரும் விண்ணப்பங்கள் இணைய வழியாக மட்டுமே பெறப்படும். அவற்றைப் பரிசீலனை செய்து உரிய அனுமதி வழங்கப்படும். எனவே, குத்தகைதாரா்கள் ஏப். 21 முதல் இணையம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டத்தின் மூலம் 13 வகையான சேவைகளை பெற்று அனைத்து விண்ணப்பதாரா்களும் பயன்பெறலாம்.
கனிம விதிகளுக்கு முரணாக அனுமதியின்றி எடுத்துச் செல்லப்படும் அனைத்து கனிமங்களும் மற்றும் தமிழக அரசால் வழங்கப்படும் வழித்தடச் சான்றுகளில் விதிகளுக்கு முரணாக திருத்தங்கள் செய்தும், அனுமதி வழங்கப்படாத பகுதிகளிலிருந்து கனிமங்கள் எடுத்துச்செல்வதும் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், உரிமையாளா், வாகன ஓட்டுநா் மற்றும் குவாரி உரிமையாளா் ஆகியோா் மீது குற்றவியல் நடடிவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.