செய்திகள் :

கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழு இன்று ரஷியா பயணம்!

post image

திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழு இன்று ரஷியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது.

இந்நிலையில், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க அனைத்துக் கட்சிகளின் எம்பிக்கள் அடங்கிய 7 குழுக்களும் அதற்கான தலைவா்களும் அறிவிக்கப்பட்டனர்.

கனிமொழி தலைமையில் குழு

தமிழக எம்.பி.யும் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழியை ரஷியா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் குழுவின் தலைவராக மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், கனிமொழி தலைமையிலான குழு இன்று ரஷியாவுக்கு புறப்படவுள்ளது. அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை நடத்தவுள்ளனர்.

தொடர்ந்து, ஸ்பெயின், கிரீஸ், சிலோவேனியா உள்ளிட்ட நாடுகளுக்கும் கனிமொழி தலைமையிலான குழு பயணம் மேற்கொள்ளவுள்ளது.

ஏற்கெனவே, ஐக்கிய ஜனதா தள எம்.பி. சஞ்சய் ஜா தலைமையிலான குழு ஜப்பானுக்கு நேற்று புறப்பட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.

தில்லி புழுதிப் புயலில் சிறுமி உள்பட மூவர் பலி!

தேசிய தலைநகரைத் தாக்கிய புழுதிப் புயல் மற்றும் கனமழை காரணமாக 9 வயது சிறுமி உள்பட மூவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தில்லியில் அதிகப்படியான வெய்யில் கொளுத்திவந்த நிலையில் நேற்று மாலை திடீ... மேலும் பார்க்க

நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கை: பாதுகாப்புப் படை வீரர் உள்பட 2 பேர் பலி!

சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சல்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையில் பாதுகாப்புப் படை வீரர் உள்பட 2 பேர் பலியாகியுள்ளனர். பிஜப்பூரின் தும்ரெல் பகுதியில் மத்திய ரிசர்வ் காவல் படையினரின் 210... மேலும் பார்க்க

வக்ஃப் பெயரில் பழங்குடியினரின் நிலங்கள் அபகரிப்பு: மத்திய அரசு வாதம்

புது தில்லி: நாட்டில் வக்ஃப் அமைப்பு என்ற பெயரில் பழங்குடியினரின் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதத்தை முன் வைத்துள்ளது.பழங்குடியினரின் நிலங்களை அபகரிப்பது கொடூர... மேலும் பார்க்க

'பாகிஸ்தானை இன்னும் அதிகமாகத் தாக்கியிருக்க வேண்டும்' - சுப்ரமணியன் சுவாமி

பாகிஸ்தானை இன்னும் அதிகமாகத் தாக்கியிருக்க வேண்டும் என்று ஆபரேசன் சிந்தூர் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். பிகார் பாட்னாவில் ஜெய் பிரகாஷ் நாராயண் விமான நிலையத்தில் செய்... மேலும் பார்க்க

2 நாள்களில் 2 முறை சல்மான் கானின் இல்லத்தில் அத்துமீறி நுழைய முயற்சி! 2 பேர் கைது!

மும்பையிலுள்ள பிரபல் பாலிவுட் நடிகர் சல்மான் கானின் இல்லத்தில் இரண்டு வெவ்வேறு முறை அத்துமீறி நுழைய முயன்ற 2 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பை பாந்திரா காவல் நிலையத்தில், பிரபல பா... மேலும் பார்க்க

ஷெல் தாக்குதலுக்குள்ளான ரஜோரியில் மீண்டும் பள்ளிகள் திறப்பு!

ஜம்மு-காஷ்மீரில் உள்ள ரஜோரி மாவட்டத்தில் ஷெல் தாக்குதலுக்குள்ளான இடங்களில் இரண்டு வாரத்திற்குப் பின் இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா-ப... மேலும் பார்க்க