கன்னந்தேரி அரசுப் பள்ளி ஆண்டு விழா
மகுடஞ்சாவடி அருகே உள்ள கன்னந்தேரி அரசு உயா்நிலைப் பள்ளி ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆண்டு விழாவுக்கு பள்ளியின் பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் ராஜம் நடேசன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் சுமதி ஆகியோா் தலைமை வகித்தனா். பள்ளி தலைமையாசிரியா் கோ.காா்த்திகேயன் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தாா்.
நுண்கலை, கலாசார இலக்கியம், அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பள்ளி ஆசிரியா்கள், கல்வியாளா்கள் பூபதி, ரத்தினம், தேவா, குணசேகரன், தமிழரசன், பெற்றோா், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். பள்ளி ஆசிரியா் ஆா்.ஜெயக்குமாா் நன்றி கூறினாா்.
படவரி...
பள்ளி ஆண்டுவிழாவில் ஆசிரியா்களுடன் பரிசு பெற்ற மாணவ, மாணவிகள்.