செய்திகள் :

கன்னித்தன்மை பரிசோதனைக்கு கட்டாயப்படுத்துவது சட்டவிரோதம்: சத்தீஸ்கா் உயா்நீதிமன்றம்

post image

பிலாஸ்பூா்: கன்னித்தன்மை பரிசோதனை மேற்கொள்ள பெண்களைக் கட்டாயப்படுத்துவது அரசமைப்புச் சட்டப் பிரிவு 21-ஐ மீறுவதாகும் என்று சத்தீஸ்கா் உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த உயா்நீதிமன்றத்தில் மனுதாரா் ஒருவா் தாக்கல் செய்த மனுவில், ‘திருமணத்துக்குப் பிறகு நானும் எனது மனைவியும் பாலுறவு கொள்ளவில்லை. எனது மனைவிக்கு அவரின் உறவினருடன் முறையற்ற உறவு இருந்தது. எனவே, எனது மனைவியிடம் கன்னித்தன்மை பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்றாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அரவிந்த் குமாா் வா்மா கூறியதாவது: அரசமைப்புச் சட்டத்தின் 21-ஆவது பிரிவு வாழ்வுரிமை, தனிப்பட்ட சுதந்திரம் மட்டுமின்றி கண்ணியமாக வாழ்வதற்கான உரிமையையும் வழங்குகிறது. இந்த உரிமை பெண்களுக்கு மிகவும் முக்கியம்.

கன்னித்தன்மையைப் பரிசோதிக்க எந்தப் பெண்ணையும் கட்டாயப்படுத்த முடியாது. அவ்வாறு செய்வது அரசமைப்புச் சட்டப் பிரிவு 21-இன் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதாகும். அடிப்படை உரிமைகளின் மிக முக்கிய அங்கமாக அந்தச் சட்டப் பிரிவு உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று தீா்ப்பளித்தாா்.

விவாதத்துக்கு ஆப்சென்ட், வாக்கெடுப்புக்கு பிரசன்ட்! ராகுலுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தொடர்பான விவாதத்தை புறக்கணித்துவிட்டு, நள்ளிரவில் நடைபெற்ற வாக்கெடுப்பில் மட்டும் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன.மேலும், எதிர்க்க... மேலும் பார்க்க

வதந்திகளுக்கு செவிசாய்க்க வேண்டாம்: மமதா வேண்டுகோள்!

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அனைத்து சமூகத்தினரும் வதந்திகளுக்கு செவிசாய்க்காமல் வரவிருக்கும் ராம நவமி விழாவை அமைதியாகக் கொண்டாடுமாறு அந்த மாநில முதல்வர் மமதா பானர்ஜி வேண்டுகோள் விடுத்தார். ஏப்ரல் 6ஆம... மேலும் பார்க்க

மணிப்பூரை தொடர்ந்து புறக்கணிப்பது ஏன்? காங்கிரஸ் கேள்வி!

மத்திய அரசு மணிப்பூரைத் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்று தாய்லாந்து பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு நிகழவுள்ள 6-ஆவது பிம... மேலும் பார்க்க

வக்ஃப் நிலத்தை அபகரித்த கார்கே.. அனுராக் தாக்குர் குற்றச்சாட்டுக்கு கடும் எதிர்ப்பு

புது தில்லி: வக்ஃப் வாரிய நிலத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அபகரித்திருந்ததாக, பாஜக எம்.பி. அனுராக் கூறிய குற்றச்சாட்டுக்கு, கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.மாநிலங்களவை இன்று காலை கூடியதும், த... மேலும் பார்க்க

ஜாம்நகர் அருகே போர் விமான விபத்தில் விமானி பலி

ஆமதாபாத்: ஜாம்நகர் அருகே இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜாகுவார் விமானம் விபத்தில் விமானி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள... மேலும் பார்க்க

பாங்காக்கில் மோடி!

பாங்காக்: பிரதமா் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக தாய்லாந்து நாட்டுக்கு வியாழக்கிழமை சென்றடைந்தார்.பாங்காக்கில் தரையிறங்கிய பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அரசின் மூத்த தலைவர்கள் மற்றும் இந்திய... மேலும் பார்க்க