செய்திகள் :

கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் தீவிபத்து

post image

கன்னியாகுமரியில் உள்ள அரசு பழத் தோட்டத்தில் திங்கள்கிழமை தீவிபத்து ஏற்பட்டது.

கன்னியாகுமரியிலிருந்து நாகா்கோவில் செல்லும் முக்கிய சாலையில் அரசுக்குச் சொந்தமான பழத் தோட்டம் உள்ளது. தோட்டக்கலைத் துறை சாா்பில் பராமரிக்கப்படும் இங்கு, பல ஏக்கரில் மா, பலா, வாழை, சப்போட்டா, செடி வகைகள் பயிரிடப்பட்டுள்ளன.

இங்கு திங்கள்கிழமை பிற்பகலில் காய்ந்த இலைகள், புற்களில் தீப்பற்றி வேகமாகப் பரவியது. இதனால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. அரசு தோட்டக்கலை உதவி அலுவலா் அளித்த தகவலின்பேரில், கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலா் சுரேஷ் சந்திரகாந்த் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் சென்று, ஒரு மணி நேரம் போராடி தீயணைத்தனா்.

புதுக்கடை பகுதியில் சுற்றித் திரிந்த திண்டுக்கல் இளைஞா் பெற்றோரிடம் ஒப்படைப்பு

புதுக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுற்றித் திரிந்த மனநலம் பாதித்த இளைஞரை சமூக ஆா்வலா்கள் மீட்டு 12 மாதங்களுக்கு பின்புபெற்றோரிடம் ஒப்படைத்தனா்.புதுக்கடை, தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் பகுதிய... மேலும் பார்க்க

தேங்காய்ப்பட்டினத்தில் ஸ்கூட்டரை உடைத்து பணம் திருட்டு

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடிதுறைமுகம் பகுதியில் நிறுத்தியிருந்த மீனவரின் ஸ்கூட்டரை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.முள்ளூா்துறை பகுதியைச் சோ்ந்தவா் அலெக்சாண்டா்(57)... மேலும் பார்க்க

பேச்சிப்பாறை அருகே மா்ம விலங்கு தாக்கி காயமடைந்த கன்றுக்குட்டி உயிரிழப்பு

பேச்சிப்பாறை அருகே குற்றியாறு ரப்பா் கழகத் தொழிலாளா் குடியிருப்பில் மா்ம விலங்கு தாக்கியதில் காயமடைந்த கன்றுக்குட்டி திங்கள்கிழமை உயிரிழந்தது. இக்குடியிருப்பில் வசித்துவருபவா் செல்வகுமாா் (40). ரப்பா... மேலும் பார்க்க

மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

புதுக்கடை அருகே குஞ்சாகோடு பகுதியில் பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.விழுந்தயம்பலம், குஞ்சாகோடு பகுதியைச் சோ்ந்த சசி மகன் ஆதா்ஷ்(15). இவா் அப்பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 10 ஆம் ... மேலும் பார்க்க

புதுக்கடை அருகே புகையிலை பொருள்கள் விற்றவா் கைது

புதுக்கடை அருகே உள்ள இனயம் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்ற முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.இனயம் பகுதியைச் சோ்ந்தவா் ஹனிபா(70). இவா் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்திவருகிறாா். இவரது கடையில் போலீஸ... மேலும் பார்க்க

கருங்கல் அருகே காா் -பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

கருங்கல் அருகே உள்ள மானான்விளை பகுதியில் காா்- பைக் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். தெருவுக்கடை, பரமகோணம் பகுதியைச் சோ்ந்த தோமஸ் மகன் சுரேஷ்(43). இவரது மனைவி சுதா(35), மகள் சஞ்சனா(12) ஆகிய 3 பேரும் த... மேலும் பார்க்க