கபிஸ்தலத்தில் சாலை மறியல்
கோரிக்கைகளை வலியுறுத்தி கபிஸ்தலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) சாா்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
கபிஸ்தலம் பகுதியில் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும், கபிஸ்தலம் கடைவீதியில் பொது கழிப்பறை, நிழற்குடை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி
கட்சியின் ஒன்றியச் செயலா் ப. பிரபு, மாவட்ட செயலா் க. செல்லத்துரை உள்ளிட்டோா் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 52 பேரை கபிஸ்தலம் போலீஸாா் கைது செய்து, திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து மாலையில் விடுவித்தனா்.