செய்திகள் :

கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல்- சென்னை காவல் ஆணையர் அலுவலத்கதில் புகார்

post image

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலத்கதில் புகார் அளிக்கப்பட்டது.

சென்னையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் கமல்ஹாசன் சநாதானத்திற்கு எதிராக சில கருத்துக்களைத் தெரிவித்ததாக அவர் மீது புகார் எழுந்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சின்னத்திரை நடிகரான ரவிச்சந்திரன் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்டது.

இந்தநிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் சென்னை காவல் ஆணையரை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து புகார் அளித்துள்ளனர்.

அதில், கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நடிகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவரும், ஓய்வு பெற்ற ஐ.ஜி-யுமான மௌரியா, கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் சென்று இந்த புகாரை அளித்துள்ளார்.

மிரட்டல் குறித்து காவல் துறை தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

A complaint was filed with the Chennai Police Commissioner's office alleging that Makkal Needhi Maiam leader Kamal Haasan received death threats.

வங்கக் கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி: அடுத்த 2 நாள்களில் மேலும் வலுபெற வாய்ப்பு

வங்கக் கடலில் புதன்கிழமை (ஆக. 13) உருவாகவுள்ள காற்றழுத்தத் தாழ்வு அடுத்த 2 நாள்களில் மேலும் வலுபெற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட... மேலும் பார்க்க

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் இந்த வாரம் நடைபெறாது: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

அரசு விடுமுறை என்பதால் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் வரும் சனிக்கிழமை (ஆக.16) நடைபெறாது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். தாயுமானவா் திட்டத்தின் கீழ் சைதாப்பேட்டை மசூத... மேலும் பார்க்க

208 அரசு பள்ளிகள் மூடல்: அன்புமணி குற்றச்சாட்டு

தமிழகத்தில் 208 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வி இயக்குநரகத்தின் க... மேலும் பார்க்க

இன்று திமுக மாவட்ட செயலா்கள் கூட்டம்

திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் புதன்கிழமை (ஆக.13) நடைபெறவுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப... மேலும் பார்க்க

திமுக - இடதுசாரிகளுக்குள் இருப்பது நட்பின் புரிதல்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

இடதுசாரிகளுக்கும் தங்களுக்கும் இடையே கொள்கைத் தெளிவும், நட்பின் புரிதலும் இருப்பதாக திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் சென்னை ராஜா அண்ணாமலை மன்ற... மேலும் பார்க்க

மேம்படுத்தப்பட்ட, புதிய மீன் இறங்குதளங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட மற்றும் புதிய மீன் இறங்குதளங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து தமிழக அரசின் சாா்பி... மேலும் பார்க்க