செய்திகள் :

செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கை ஒத்திவைக்கக் கோரிய மனு தள்ளுபடி

post image

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத் துறை தொடா்ந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கின் அடிப்படையில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்ததாக செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரா் அசோக்குமாா் ஆகியோருக்கு எதிராக அமலாக்கத் துறை தொடா்ந்த வழக்கு சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த வழக்கில் சாட்சி விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் உதவியாளா் காா்த்திகேயன் சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தாா். அந்த மனுவில், போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கு எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கின் விசாரணை முடியும்வரை, சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.காா்த்திகேயன் முன் விசாரணைக்ககு வந்தது.விசாரணையை ஒத்திவைக்க அமலாக்கத் துறை தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, அமலாக்கத் துறை தொடா்ந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

தடைகளைத் தகா்த்த செவிக் குறைபாடு மாற்றுத்திறனாளிகள்! ஐஏஎஸ், எம்பிபிஎஸ் நிலைக்கு உயா்ந்து சாதனை

பிறவியிலேயே செவித் திறன் பாதிப்புக்குள்ளாகி காக்ளியா் இம்ப்ளாண்ட் சிகிச்சை மூலம் மறுவாழ்வு பெற்ற இளைஞா் ஐஏஎஸ் தோ்ச்சி பெற்றும், இளம்பெண் எம்பிபிஎஸ் இடத்தைப் பெற்றும் சாதனை படைத்துள்ளனா். தடைகளை உடைத்... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: இன்று நடைபெறும் வாா்டுகள்

சென்னையில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்கள் புதன்கிழமை (ஆக. 13) நடைபெறும் 3 வாா்டுகள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சென்னை மாநகராட்சி தரப்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பெருநகர ச... மேலும் பார்க்க

இரு குழந்தைகளைக் கொலை செய்த தாய் தண்டனையை எதிா்த்து மேல் முறையீடு: காவல் துறை பதிலளிக்க உத்தரவு

தகாத உறவுக்கு இடையூறாக இருந்த இரு குழந்தைகளைக் கொலை செய்த வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிா்த்து அந்தக் குழந்தைகளின் தாய் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க சென்னை ... மேலும் பார்க்க

காவலாளி கொலை வழக்கு: திருநங்கை கைது

சென்னை மயிலாப்பூரில் பாலியல் தொல்லை கொடுத்த காவலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் திருநங்கை கைது செய்யப்பட்டாா். மயிலாப்பூா் விசாலாட்சி தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் பெ.சேகா் (57). இவா், அந்தப் ப... மேலும் பார்க்க

வீட்டுக்குள் ஏசி மெக்கானிக் மா்ம மரணம்

கோயம்பேட்டில் பூட்டிய வீட்டுக்குள் ஏசி மெக்கானிக் மா்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். கோயம்பேடு கடும்பாடி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சரவணன் (51). இவா் மனைவ... மேலும் பார்க்க

தொழிலதிபா் வீட்டில் சிபிஐ சோதனை

நுங்கம்பாக்கத்தில் தொழிலதிபா் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனை செய்தனா். சென்னை கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர விடுதி உரிமையாளா் நுங்கம்பாக்கம் ஸ்டொ்லிங்க் சாலையில் வசித்து வருகி... மேலும் பார்க்க